அமன்கட் புலிகள் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமர்கட் புலிகள் காப்பகம், இந்திய மாநிலமான உத்தராகண்டின் எல்லைக்கு அருகில், உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோரில் இருந்து 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 196 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இங்கு 15 புலிகள், 25 யானைகள் ஆகியனவும், மான், சிறுத்தைப்புலி உள்ளிட்ட விலங்குகளும் பாதுகாக்கப்படுகின்றன. இது ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த காப்பகத்துக்குள் பீலி அணையும் ஹரேவலி ஏரியும் உள்ளன.[1] ஆண்டுதோறும் பறவைகள் வலசைக்கு வந்து செல்கின்றன. பறவை விரும்பிகளுக்காக ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தவும், விருந்தினர் அறைகள் கட்டவும், சாலைகளை மேம்படுத்தவும், திட்டமிட்டுள்ளது மாநில அரசு. இந்த காப்பகம் பிஜ்னோர் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1]

சான்றுகள்[தொகு]