அமந்தா வெல்ட்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Amanda Weltman
பிறப்பு1979 (அகவை 44–45)
Cape Cod, Massachusetts, United States
தேசியம்South African
பணிPhysicist
அறியப்படுவதுProposing "chameleon theory"
explaining dark energy

அமந்தா வெல்ட்மன்(Amanda Weltman) (பிறப்பு: 1979) ஒரு தென்னாப்பிரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இருண்ட ஆற்றல் இருப்பை விளக்க " பச்சோந்தி ஈர்ப்பு " முன்மொழிந்த தொடர்ச்சியான ஆவணங்களை இணைந்து எழுதியதற்காக இவர் மிகவும் பெயர்பெற்றவர். அவர் தற்போது கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் ஆராய்ச்சித் தலைவராகவும் உள்ளார்.

கல்வியும் தொடக்கநிலை ஆராய்ச்சியும்[தொகு]

அமண்டா வெல்ட்மேன் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவராக இருந்தபோது முதலில் இயற்பியலுக்கு ஈர்க்கப்பட்டார்.[1] ஒரு இயற்பியலாளராக இருப்பதற்கான தனது ஈர்ப்பை விவரித்த அவர் , " பிரபஞ்சம் செயல்படும் முறையைப் புரிந்துகொள்வது என்பது எவருக்கும் இருக்கக்கூடிய மிகச்சிறந்த வேலையாகும் " என்று கூறினார்.[1]

2007 ஆம் ஆண்டில் வெல்ட்மேன் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் கோட்பாட்டு இயற்பியலாளர் பிரையன் கிரீன் மேற்பார்வையிட்டார்.[2] இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் நடத்தும் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் ஒரு பகுதியாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிந்தைய முனைவர் ஆராய்ச்சியையும் செய்தார்.[3] அவர் தற்போது 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உயர் ஆற்றல் இயற்பியல் அண்டவியல் மற்றும் வானியற்பியல் கோட்பாடு குழுவின் இயக்குநராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வெல்ட்மன் 1979 ஆம் ஆண்டில் கேப் கோட் மாசசூசெட்சில் பிறந்தார் , மேலும் அவர் இரண்டு மாதமாக இருந்தபோது தனது பெற்றோருடன் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.[4][5] அவர் தனது குழந்தைப் பருவத்தை யோகான்னசுபர்கிலும் கேப் டவுனிலும் கழித்தார்.[5][2]அவர் ஒரு குழந்தையாக ஒரு போட்டி விளையாட்டு மங்கையாக இருந்தார்.[5]

அவர் அதே பல்கலைக்கழகத்தில் சரம் கோட்பாட்டாளராக இருக்கும் தனது கணவர் ஜெஃப் முருகனுடன் வாழ்கிறார். அவர் 1997 இல் அவரைச் சந்தித்தார் , அவருடன் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[2][1] பாலின ஒற்றுமைகள் இல்லாத ஒரு குடும்பத்தில் வளர்க்கப்பட்டதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் , பெண் அறிவியலாள்ர்கள் எதிர்கொண்ட தடைகள், குழந்தைகலில் வெளிப்படும் ஒத்த வடிவத்தில் ஏற்பட்டால் அவை குறிப்பாக தீங்கு விளைவிப்பனவாகவும் அமைதலையும் அவர் கூறியுள்ளார்.[1] அவரும் அவரது கணவரும் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்குவதோடு , மேலும் குடும்பமாக இணைந்து அடிக்கடி மாநாடுகளுக்குச் செல்கிறார்கள்.[1]

ஆராய்ச்சியும் தொழிலும்[தொகு]

வெல்ட்மன் 2004 ஆம் ஆண்டு ஜசுட்டின் கௌரி உடன் இணைந்து " பச்சோந்தி அண்டவியல் " என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியபோது அறியப்பட்டார் , இது இருண்ட ஆற்றலை விளக்க ஒரு கோட்பாட்டை முன்மொழிந்தார்.[1] அந்த நேரத்தில் அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 24 அகவை பட்டதாரி மாணவராக இருந்தார். அண்டத்தின் விரைவான விரிவாக்கத்திற்கான விளக்கமாக இருண்ட ஆற்றல் முன்மொழியப்பட்டுள்ளது. கௌரி, வெல்ட்மன் ஆகியோர் இந்த விரிவாக்கத்திற்கு வழிவகுத்த ஒரு புதிய ஆற்றலின் இருப்பை முன்மொழிந்தனர் , இது அது இருக்கும் சூழலைப் பொறுத்து மாறியது. துகள்கள் அடர்த்தியாக ஒன்றாக இருக்கும்போது அது மெலிவாகவும் , அவை நெடுந்தொலைவில் இருக்கும்போது வலுவாகவும் இருக்கும்.எனவே , பொருள் ஒப்பீட்டளவில் அடர்த்தியாக இருக்கும் பகுதிகளில் பச்சோந்தி விசையை கண்டறிவது கடினம் , ஆனால் விண்வெளியின் வெற்று பகுதிகளில் இது பொருள்களை உந்தித் தள்ளி அண்டத்தை விரிவுபடுத்துகிறது என்று இக்கோட்பாடு கூறுகிறது.[6]

பச்சோந்தி ஈர்ப்பு கோட்பாடு ஓரளவு கட்டாயமானது , ஏனெனில் இதை ஆய்வகச் செய்முறைகள் உட்பட பலவிதமான சூழல்களில் சோதிக்கலாம்.[7] ஆய்வகத்தில் இருண்ட ஆற்றலுக்கான முதல் தேடல்கள் பச்சோந்திகளுக்கான தேடல்களாக இருந்தன. 2007 ஆம் ஆண்டில் வெல்ட்மன் காம்மேவி செய்முறை செய்யும் பெர்மி ஆய்வகத்தின் ஒரு செய்முறைக் குழுவில் சேர்ந்தார் , இது ஆக்சியான்போன்ற துகள்களைத் தேட வடிவமைக்கப்பட்டது. பச்சோந்தி ஈர்ப்பு அளவுருக்கள் மீதான முதல் வரம்புகள் 2008 ஆம் ஆண்டில் இந்தச் செய்முறையின் வழி முன்வைக்கப்பட்டன.[8] இந்தச் செய்முறை மீன்டும் ழ்வடிவமைத்து கட்டப்பட்டது , இது 2010 ஆம் ஆண்டில் பச்சோந்தி இருண்ட ஆற்றலைக் கட்டுப்படுத்தும் முதல் முடிவுகளுடன் காம்மேவி தேடல் (கேமிலியன் ஆஃப்டெர்க்லோ தேடல் பரிசோதனை) நோக்கத்திற்காக கட்டப்பட்டது.[9] இவை இவ்வகையான முதல் செய்முறைகளாகும். மேலும் கோட்பாட்டின் மீது முதல் நேரடி சோதனை வரம்புகளை வைக்க முடிந்தது. இந்த வேலை ஆய்வகத்தில் பச்சோந்தி ஈர்ப்பு அல்லது இருண்ட ஆற்றலைத் தேடும் ஆய்வகச் செய்முறைகளின் ஒரு புதிய துணைத் துறையை முன்னோடியாக உருவாக்கியது. கௌரி மற்றும் வெல்ட்மன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்தக் கோட்பாடு " அண்டவியல், செய்முறை இயற்பியலில் முழு துணைத் துறைகளை உருவாக்கியது " என்று கூறப்பட்டுள்ளது. அவரது படைப்புகள் ஆல்பர்ட் ஐன்சுட்டைனின் படைப்புகளின் தொடர்ச்சியானவை என விவரிக்கப்பட்டுள்ளன.

அண்மைய ஆண்டுகளில் வெல்ட்மன் வானியற்பியலில் கணிசமான பங்களிப்புகளைச் செய்துள்ளார் , குறிப்பாக விரைகதிர் வெடிப்புகள் (FRBs) துறையில் நெடுந்தொலைவு பால்வெளிகளில் உருவாகும் கதிரலைகளின் மர்மமான மில்லி நொடி நீள்வெடிப்புகள்.[10] இங்கே அவரது முத்ன்மைப் பங்களிப்புகளில் ஒன்று எஃப். ஆர். பி மூதாதையர்களை விளக்குவதற்கு கிடைக்கக்கூடிய கோட்பாட்டுப் படிமங்களின் விரிவான பட்டியல் ஆகும்.[11] விரைகதிர் வெடிப்பு இயற்பியலுக்கு அவர் செய்த பல முதன்மைப் பங்களிப்புகளில் , கெர்ட்சென்சுட்டைன் - செல்டொவிச் (GZ) விளைவு விரைகதிர் வெடிப்பு களின் படிமத்தின் ஒரு புதிய செய்முறையை அவர் முன்மொழிந்துள்ளார் , இது ஒரு துடிமீன்(பல்சார்) காந்த மண்டலத்தின் வழியாக செல்லும் ஈர்ப்பு அலைகளை எவ்வாறு (பகுதி) மின்காந்த கதிர்வீச்சாக மாற்ற முடியும் என்பதை விவரிக்கிறது. இந்த படிமத்தின் ஒரு புதுமையான கூறுபாடு , எதிர்கால ஈர்ப்பு அலைக் காணிகள் கண்டறியும் ஈர்ப்பு அலைகளை விரைகதிர் வெடிப்புகள் கொண்டிருக்க வேண்டும் என்ற கணிப்பு ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் தற்போது கட்டுமானத்தில் உள்ள ஹைட்ரஜன் செறிவு, நிகழ்நேர பகுப்பாய்வுச் செய்முறையில் (HIRAX)வெல்ட்மேன் முதன்மைப் பங்கு வகிக்கிறார்.

பொது ஈடுபாடு[தொகு]

கல்விப் பேச்சுக்களோடு, வெல்ட்மன் அண்டவியல் , வானியற்பியல், அறிவியல் பற்றி பொதுமக்களுக்கான விரிவுரைகளை வழங்குகிறார். அவர் நேச்சர் நியூஸ் அண்டு ரிவ்யூஸ் என்ற இதழில் பொதுமக்களுக்காக பல கட்டுரைகளை எழுதியுள்ளார் , மேலும் அறிவியல் , அண்டவியல், வானியற்பியல் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் நேர்காணல்களை வழங்கியுள்ளார்.[12][13][14]

வெல்ட்மன் தேசிய வாரியங்கள், கல்விக்கூடங்களில் தலைமைப் பாத்திரங்கள்வழி குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் உள்ள அறிவியல் சமூகத்திற்கு சேவை செய்துள்ளார். அவர் 2012 இல் தென்னாப்பிரிக்க இளம் அறிவியல் கல்விக் கழகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 - 2016 இல் அதன் ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெல்ட்மன் 2015 முதல் தென்னாப்பிரிக்காவின் தேசியக் கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தின் வழிநடத்தல் வாரியத்தில் பணியாற்றியுள்ளார் , தற்போது தேசிய கோட்பாட்டு, கணிப்பு அறிவியல் நிறுவனத்தின் வழிநடத்துதல் குழுவில் பணியாற்றுகிறார்.

வெல்ட்மன் 2018 முதல் உருவாண்டா, அடிப்படை ஆய்வுக்கான கிழக்காப்பிரிக்க நிறுவனத்தின் வழிநடத்தல் குழுவில் பணியாற்றியுள்ளார்.

விருதுகளும் தகைமைகளும்[தொகு]

 • இயற்கை அறிவியல், பொறியியலில் வளர்ந்து வரும் இளம் ஆய்வாளருக்கான தேசிய அறிவியல் மகளிர் சிறப்பு விருது (2009)
 • 2011 இல் தென்னாப்பிரிக்காவின் அரசு கழக மெயரிங் நவுதே பதக்கம்[5][4]
 • NSTF-BHP பில்லிட்டன் டி. TW காம்புலே விருது[5]
 • தென்னாப்பிரிக்க இயற்பியல் நிறுவனத்தின் வெள்ளிவிழா பதக்கம்[5]
 • 2010 இல் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத்தின் இளம் ஆராய்ச்சியாளர் விருது[4]
 • 2010 ஆம் ஆண்டில் கல்லூரி இளம் ஆராய்ச்சியாளர் விருது[4]
 • 2018 இல் உலக இளைஞர் கழகத்துக்குத் தேர்வு[15]
 • 2016 - 17 ஆம் ஆண்டில் ஐன்சுட்டைன் ஆய்வுறுப்பினர் பரிசு பெற்றவர்[5]
 • சைமன்சு ஆய்வுநல்கை ஐசிடிபி அறக்கட்டளை 2020 - 2025[16]
 • தென்னாப்பிரிக்க ஆராய்ச்சிக் கட்டில் விருது 2016 - 2020 அடுக்கு 2 , 2021 - 2025 அடுக்கு 1

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Nordling, Linda (7 March 2013). "Amanda Weltman: Driving Force". Nature 495: 29–30. http://www.nature.com/news/from-the-frontline-30-something-science-1.12549. பார்த்த நாள்: 21 December 2015. 
 2. 2.0 2.1 2.2 Chant, Ruth (12 December 2013). "Remarkable Journeys – Dr Amanda Weltman". Alliance of Women Scientists. Archived from the original on 27 February 2019. பார்க்கப்பட்ட நாள் 29 June 2016.
 3. "SA's future could be written in the stars". IOL. பார்க்கப்பட்ட நாள் 29 June 2016.
 4. 4.0 4.1 4.2 4.3 "Sams-Ams 2011". Nmmu.ac.za. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Amanda Weltman | Next Einstein Forum". Nef.org. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
 6. Belinda Smith (7 September 2015). "Hunting for dark energy | Cosmos". Cosmosmagazine.com. பார்க்கப்பட்ட நாள் 29 June 2016.
 7. Merali, Zeeya (2009-05-29). "Dark-energy particle spotted?" (in en). Nature. doi:10.1038/news.2009.531. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. https://www.nature.com/articles/news.2009.531. 
 8. Cho, Adrian (2007-06-29). "A Spare Magnet, a Borrowed Laser, and One Quick Shot at Glory" (in en). Science 316 (5833): 1838–1839. doi:10.1126/science.316.5833.1838. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. https://www.science.org/doi/10.1126/science.316.5833.1838. 
 9. Chou, A. S.; Wester, W.; Baumbaugh, A.; Gustafson, H. R.; Irizarry-Valle, Y.; Mazur, P. O.; Steffen, J. H.; Tomlin, R. et al. (2009-01-22). "Search for Chameleon Particles Using a Photon-Regeneration Technique" (in en). Physical Review Letters 102 (3). doi:10.1103/PhysRevLett.102.030402. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9007. https://link.aps.org/doi/10.1103/PhysRevLett.102.030402. 
 10. Weltman, Amanda; Walters, Anthony (November 2020). "A fast radio burst in our own Galaxy" (in en). Nature 587 (7832): 43–44. doi:10.1038/d41586-020-03018-5. https://www.nature.com/articles/d41586-020-03018-5. 
 11. "FRB Theory Wiki". frbtheorycat.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
 12. "Amanda Weltman". The Conversation (in ஆங்கிலம்). 2019-02-07. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
 13. Weltman, Amanda; Murugan, Jeff (2020). "Viral Spreading in a Small World". South African Journal of Science.
 14. Weltman, Amanda; Walters, Anthony (November 2020). "A fast radio burst in our own Galaxy" (in en). Nature 587 (7832): 43–44. doi:10.1038/d41586-020-03018-5. https://www.nature.com/articles/d41586-020-03018-5. 
 15. "Amanda Weltman". Global Young Academy. பார்க்கப்பட்ட நாள் 15 December 2019.
 16. "Amanda Weltman | ICTP". www.ictp.it. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமந்தா_வெல்ட்மன்&oldid=3812710" இலிருந்து மீள்விக்கப்பட்டது