அப்போலோனியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அப்போலோனியஸ் (Apollonius of Perga) (கி.மு. 262 - 200) என்பவர் மாபெரும் கணித மேதையும், வானியல் வல்லுநருமாவார். இவர் தெற்காசிய மைனாில்லுள்ள பொ்காவில் பிறந்தாா். அங்கிருந்து அலெக்சாண்ரியா சென்று யுக்ளிடின் சீடா்களிடம் பயின்றாா். பல்வேறு கணித தலைப்புகளில் நுால்களை எழுதியுள்ளாா். அவா் கூம்புவெட்டு வடிவங்களான பரவளையம் அதிபரவளையம் நீள்வட்டம் ஆகியவற்றை கண்டறிந்தாா்.

இவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்கக் கணித மேதை. கூம்பின் வெட்டுவாய் வடிவங்களைப் பற்றி இவர் காலத்திற்கு முன் அறியப்பட்ட உண்மைகளையும், அவற்றைப்பற்றி இவரே கண்டுபிடித்த பல உண்மைகளையும் கோவையாகத் தொகுத்து எழுதினார். யூக்ளிட்டின் காலத்தில் ஆரம்பமாகி அப்போலோனியஸின் காலத்தோடு முடிவுற்ற கி.மு. மூன்றாம் நூற்றாண்டு, கிரேக்க கணித வரலாற்றில் மிக முக்கியமான காலமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமயந்தி பாக்கியநாதன், என், (2003), கணிதம் கற்பித்தல், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, ப. 28
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்போலோனியஸ்&oldid=2418890" இருந்து மீள்விக்கப்பட்டது