அப்போட்டாபாத் மாவட்டம்

ஆள்கூறுகள்: 34°00′N 73°00′E / 34.000°N 73.000°E / 34.000; 73.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்போட்டாபாத் மாவட்டம்
ایبٹ آباد
மாவட்டம்
1907-இல் அப்போட்டாபாத் நகரம்
1907-இல் அப்போட்டாபாத் நகரம்
ஆள்கூறுகள்: 34°00′N 73°00′E / 34.000°N 73.000°E / 34.000; 73.000
நாடுபாக்கித்தான் பாகிஸ்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டு1853
தலைமையிடம்ஆப்டாபாத்
பரப்பளவு[1]
 • மொத்தம்1,967 km2 (759 sq mi)
மக்கள்தொகை (2017)[2]
 • மொத்தம்1,332,912
 • அடர்த்தி680/km2 (1,800/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் நேரம் (ஒசநே+5)
ஒன்றியக் குழுக்கள்51
வருவாய் வட்டங்கள்2
இணையதளம்www.abbottabad.gov.pk

அப்போட்டாபாத் மாவட்டம் (Abbottabad District) (ضِلع ایبٹ آباد}, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் அப்போட்டாபாத் ஆகும். [3] இம்மாவட்டம் 1,969 சகிமீ பரப்பளவு கொண்டது.

எல்லைகள்[தொகு]

அப்போட்டாபாத் மாவட்டத்தின் வடக்கில் மன்செரா மாவட்டம், கிழக்கில் முசாஃபராபாத் மாவட்டம், மேற்கில் ஹரிபூர் மாவட்டம் மற்றும் தெற்கில் ராவல்பிண்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

வரலாறு[தொகு]

பெயர்க் காரணம்[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் ஹசாரா கோட்டத்தின் முதல் ஆணையாளராக பணிபுரிந்த பிரித்தானிய இராணுவ மேஜர் ஜேம்ஸ் அப்போட் நினைவாக இம்மாவட்டத்திற்கு அப்போட்டாபாத் என பெயரிடப்பட்டது.[4] தற்போதைய அப்போட்டாபாத் மாவட்டம், முன்னர் ஹசாரா மாவட்டத்தில் ஒரு வருவாய் வட்டமாக இருந்தது.

புவியியல்[தொகு]

இம்மாவட்டத்தின் கிழக்கில் பாயும் ஜீலம் ஆறு, அப்போட்டாபாத் மாவட்டத்தையும், பூஞ்ச் மாவட்டத்தையும், இராவல்பிண்டி மாவட்டத்தையும் பிரிக்கிறது. மலைக்காடுகள் மிக்க இம்மாவட்டத்தில் தோர் மற்றும் ஹர்ரோ ஆறுகள் பாய்கிறது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,16,534 குடியிருப்புகள் கொண்ட அப்போட்டாபாத் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 13,32,912 ஆகும். அதில் 6,77,570 ஆண்கள் ; பெண்கள் 6,55,281 ஆகவும்; மூன்றாம் பாலித்தவர்கள் 61 ஆகவுள்ளனர்.[5]இம்மாவட்டத்தில் இந்துகோ மொழியை 94.58% மக்கள் பேசுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

அப்போட்டாபாத் மாவட்டப் பிரிவுகள், அதில் அப்போட்டாபாத் வருவாய் வட்டம் சிவப்பு நிறத்தில் உள்ளது.

அப்போட்டாபாத் மாவட்ட்டம் அப்போட்டாபாத் மற்றும் ஹவேலியன் என இரண்டு வருவாய் வட்டங்களும்[6] இமமாவட்டத்தில் நவன்செர் நகராட்சியும், 51 ஒன்றியக் குழுக்களும் உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் ஹவேலான் இராணுவப் பாசறையும் உள்ளது.

அரசியல்[தொகு]

கைபர் பக்துன்வா மாகாண சட்டமன்றத்திற்கு இம்மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Asgharabad District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Abbottabad District at a Glance". Islamabad: Population Census Organization. Archived from the original on January 2, 2012. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.
  2. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
  3. Geography of District Abbottabad பரணிடப்பட்டது நவம்பர் 29, 2007 at the வந்தவழி இயந்திரம்
  4. IUCN Pakistan (2004). Abbottabad – State of the environment and Development. IUCN Pakistan and Khyber Pukhtoonkhwa: Karachi, p. 2.
  5. District Abbottabad Population 2017
  6. "Sherwan", Wikipedia (in ஆங்கிலம்), 2019-05-31, பார்க்கப்பட்ட நாள் 2019-08-06
  7. PF-48 (Abbottabad-V) Result: Announced பரணிடப்பட்டது 2012-11-15 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்போட்டாபாத்_மாவட்டம்&oldid=3717179" இலிருந்து மீள்விக்கப்பட்டது