அப்புசாமி (கற்பனைக் கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்புசாமி
Appusami.jpg
அப்புசாமியும் (இடப்புறம்) சீதாப்பாட்டியும் (வலப்புறம்)
முதல் தோற்றம் "அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்"
உருவாக்கியவர் பாக்கியம் ராமசாமி (எழுத்தாளர்)
தகவல்
பால்ஆண்
குறிப்பிடத்தக்க பிறர்சீதாப்பாட்டி

அப்புசாமி (appusaamy) எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் எழுதப்பட்ட புதினங்களிலும் சிறுகதைகளிலும் வரும் முக்கிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். முதன்முதலாக 1963 ஆம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த சிறுகதைகளில் இக்கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு தலைமுறைகளாக பல்வேறு கதைகளிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் நாடகங்களிலும் அப்புசாமி என்ற இக்கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.[1][2][3] சென்னையில் உள்ள ஒரு நகைச்சுவை மன்றத்திற்கு இக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும் இத்தொடர் கதைகளை ஊக்குவிக்கும் வகையிலும் "அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை மன்றம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.[4]

பாக்கியம் ராமசாமி[தொகு]

எழுத்தாளர் ஜ. ரா. சுந்தரேசன் (செப்டம்பர் 1, 1930 to டிசம்பர் 8, 2017) அவர்களின் புனைப்பெயர் பாக்கியம் ராமசாமி ஆகும்.[5]. தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டபுரம் என்ற ஊரில் இவர் பிறந்தார் இவரது தாயார் பெயரான பாக்கியம் மற்றும் தந்தையின் பெயரான ராமசாமி இரண்டையும் இணைத்து இந்த புனைப் பெயரான "பாக்கியம் ராமசாமி" என்பதை சூட்டிக்கொண்டார். 1963ம் ஆண்டு குமுதம் வார இதழில் "அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்" என்ற கதையின் மூலம் அப்புசாமி என்ற கதாபாத்திரத்தை தமிழ்ச் சிறுகதை உலகில் நகைச்சுவை கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தியுள்ளார். அதுமுதல் எண்ணற்ற நாவல்களையும் நாடகங்களையும் சிறுகதைகளையும் அப்புசாமி, சீதாப்பாட்டி போன்ற அதே கதாபாத்திரங்களை உபயோகப்படுத்தி எழுதியுள்ளார். யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, ஜ்வாலாமாலினி போன்ற பல்வேறு புனைபெயர்களில் பயன்படுத்தியும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.குமுதம் வார இதழில் எழுத்தாளராக பணியாற்றிய இவர் 1990ஆம் ஆண்டு அதே இதழில் இணை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.[6][7]

புத்தகங்கள்[தொகு]

இதுவரை 30-க்கும் மேற்பட்ட புதினங்கள் மற்றும் குறுநாவல்கள் அப்புசாமி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.[8] இவற்றில் பெரும்பான்மையானவை குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்து பின்னர் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளது ஓவியர் ஜெயராஜ் இக்கதாபாத்திரத்திற்கு ஓவியம் வரைந்துள்ளார்.

 • "அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்"
 • "1001 அப்புசாமி இரவுகள்"
 • "மாணவர் தலைவர் அப்புசாமி"
 • "அப்புசாமியும் அற்புத விளக்கும்"
 • "பாமர கீதை"
 • "சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி"
 • "அப்புசாமி படம் எடுக்கிறார்"
 • "பீரோவின் பின்னால்"
 • "ஆகஸ்ட் தியாகி அப்புசாமி"
 • "சீதாப்பாட்டியின் சபதம்"
 • "வீரப்பன் காட்டில் அப்புசாமி"
 • "ஆகாசவாணியில் அப்புசாமி"
 • "அப்புசாமி டைவர்ஸ் கேட்கிறார்"
 • "கம் ஆன் அப்புசாமி கம் ஆன்"
 • " மனித வெடிகுண்டு அப்புசாமி"
 • "அப்புசாமியின் கலர் டிவி"
 • "அப்புசாமியும் ஹிப்னாடிச பூனையும்"
 • "அப்புசாமியும் அழகிப் போட்டியும்"
 • "அப்புசாமியின் தாலி பாக்கியம்"
 • "அப்புசாமியும் பாரதி நாற்காலியும்"

மேற்கோள்கள்[தொகு]

 1. "Yesteryear laugh riot now on DVD". தி இந்து (14 November 2007). பார்த்த நாள் 9 May 2010.
 2. "Appusami - Seetha Patti on Win TV". Screen (8 March 2002). பார்த்த நாள் 9 May 2010.
 3. "தொடர் - 5 பொக்கிஷமாக நீங்கள் கருதுவது எவற்றை?" (Tamil). தினமலர் (2 May 2009). பார்த்த நாள் 9 May 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
 4. "Kathadi Ramamurthy felicitated". The Hindu (6 July 2009). பார்த்த நாள் 9 May 2010.
 5. http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-journalist-and-humourist-ja-ra-sundaresan-dead/article21296533.ece
 6. "Bhakkiyam Ramasamy profile". Tamil Authors.com. பார்த்த நாள் 9 May 2010.
 7. ""வித்தியாசமா யோசிச்சா ஜெயிக்கலாம்!" - ஓவியர் ஸ்யாம்" (Tamil). ஆனந்த விகடன். மூல முகவரியிலிருந்து 20 April 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 May 2010.
 8. "Bhakkiyam Ramasamy books". Dina Malar. மூல முகவரியிலிருந்து 23 August 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 May 2010.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]