அப்பிகட்லா
அப்பிகட்லா Appikatla | |
---|---|
கிராமம் | |
Dynamic map | |
ஆள்கூறுகள்: 15°58′N 80°30′E / 15.967°N 80.500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | பாபட்லா |
வட்டம் (தாலுகா) | பாபட்லா மண்டலம் |
வார்டுகள் | 10 |
அரசு | |
• வகை | Panchayati raj |
• நிர்வாகம் | அப்பிகட்லா கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 791 ha (1,955 acres) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 1,831 |
• அடர்த்தி | 230/km2 (600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522310 |
இடக் குறியீடு | +91–8643 |
வாகனப் பதிவு | ஆ.பி |
அப்பிகட்லா (Appikatla) இந்திய மாநிலமான ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது தெனாலி வருவாய் பிரிவின் பாபட்லா மண்டலத்தில் அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]பாபட்லா மண்டல் தலைமையகமான பாபட்லாவிற்கு வடமேற்கில் 15°58′வ 80°30′கி [4] என்ற அடையாள ஆள்கூறுகளில் அப்பிகட்லா கிராமம் 791 எக்டேர் (1,950 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.
ஆட்சி
[தொகு]அப்பிகட்லா கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பு ஆகும். இக்கிராமத்தில் 10 வார்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.[5] தற்போதைய சர்பஞ்ச் பதவி காலியாக உள்ளது. இப்பதவி வார்டு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த கிராமம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் இடைநிலை மட்டத்தில் பாபட்லா மண்டல் பரிசத்தால் நிர்வகிக்கப்படுகிறது.[4]
கல்வி
[தொகு]கல்வியாண்டுக்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 5 பள்ளிகள் உள்ளன. ஓர் அரசு பள்ளி, 2 மாவட்ட/மண்டல் பரிசத் பள்ளிகள் மற்றும் 2 தனியார் பள்ளிகளும் இவற்றில் அடங்கும்.[6]
போக்குவரத்து
[தொகு]தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலத்தின் விசயவாடா இரயில்வே பிரிவில் உள்ள புறநகர் தரம்-6 (என். எசு.கி-6) நிலையமான அப்பிகட்லா இரயில் நிலையம், கிராமத்திற்கு இரயில் இணைப்பை வழங்குகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 96. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 498. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ 4.0 4.1 "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 830–831. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
- ↑ "Local Body Elected Members of Kolakaluru". Area Profiler. Ministry of Panchayati Raj. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
- ↑ "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 April 2019. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ "Stations – Category-wise (NEW)". South Central Railway. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.