அப்பாச்சி (பழங்குடிகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பாச்சி
அப்பாச்சி மக்கள்
மொத்த மக்கள்தொகை
(56,060 (சுய அடையாளம்) [1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அரிசோனா, நியூ மெக்சிகோ மற்றும் ஒக்லகோமா
மொழி(கள்)
கிரிகாயுவா மொழி, ஜிகாரில்லா மொழி, லிபான் அப்பாச்சி, பிளைய்ன்ஸ் அப்பாச்சி, மெஸ்கலரோ மொழி, மேற்கு அப்பாச்சி மொழி
சமயங்கள்
நாட்டு அமெரிக்க பள்ளி, கிறித்துவம், பரம்பரை ஷமானிய பழங்குடி சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
நவயோ

அப்பாச்சி (ஒலிப்பு: /əˈpætʃiː/) என்பவர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் வசித்து வந்த பல பண்பாடுகளைச் சேர்ந்த முதற்குடி மக்கள் குழுக்களாவர். இந்த வட அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் அலாஸ்கா மற்றும் மேற்கு கனடாவில் பேசப்படும் அதபஸ்கான் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. தற்காலத்தில் அப்பாச்சி என விளிக்கப்படுபவர்கள் தொடர்புள்ள நவயோ இன மக்களை உள்ளடக்கியவர்கள் அல்லர். இருப்பினும் இந்த இரு இனக்குழுக்களிடையே பலமான பண்பாடு மற்றும் மொழி வகையிலான பிணைப்பு உள்ளது. சிலநேரங்களில் இவ்விரு இனமக்களையும் கூட்டாக அப்பாச்சியர் என விளிக்கின்றனர். இந்த இன மக்கள் துவக்கத்தில் கிழக்கு அரிசோனா,வடமேற்கு மெக்சிக்கோ,நியூ மெக்சிகோ,டெக்சாஸ் மற்றும் தெற்கு பெரும் புல்வெளி பகுதிகளில் வாழ்ந்திருந்தனர்.

தற்கால அப்பாச்சியர் குடியேற்றங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Census.gov Census 2000 PHC-T-18. American Indian and Alaska Native Tribes in the United States: 2000. ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் 2000 (பார்வையிடப்பட்டது திசம்பர் 28, 2009)

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Apaches
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாச்சி_(பழங்குடிகள்)&oldid=3407896" இலிருந்து மீள்விக்கப்பட்டது