அப்பலோனியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அப்பலோனியஸ்[தொகு]

கிரேக்கக் கணித அறிஞரான அப்பலோனியஸ் (Appolonius) ) கூம்புவெட்டு முகத்தையும் (Conic section) அதன் தொடர்புடைய வடிவயியல் தன்மைகளையும் கண்டுபிடித்தார். இவருடைய பல ஆய்வுக்கட்டுரைகள் தொலைந்துவிட்டன. இருந்தபோதிலும், அக்கட்டுரைகளின் தலைப்புகள், பொருள் சுருக்கம் போன்றவை பின்னால் வந்த அறிஞர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டன.

அப்பலோனியஸ் பிறப்பு வரலாறு[தொகு]

அப்பலோனியஸ் பெர்கா (Perga) விலுள்ள பாம்பை லியாவில் ( Pamphylia) (இது தற்போது துருக்கியில் உள்ளது) கி.மு. 262இல் பிறந்தார். இவா; அலெக்ஸ் சாண்டிரியா (Alexandria) என்ற நகரத்தில் கல்வி பயின்றார். பெர்கமம் (Pergamum) என்ற இடத்திற்குச் சென்ற போது யுடமஸ் (Eudemus) அட்டாலஸ் (Attalus ) போன்ற அறிஞர்களைச் சந்திக்க நேர்ந்தது. அதன்பின் அவர்கள் உதவியுடன் கூம்பகத்தைப் (Conics) பற்றிய முதல் புத்தகத்தை எழுதத் தொடங்கினார். கூம்பகம் தொடர்பான, யூக்லிடு (Euclid ) மற்ற பல அறிஞர்களின் கண்டுபிடிப்புகளைச் சார்ந்து, அப்பலோனியஸ் முதல் நான்கு புத்தகங்கள் எழுதினார். அவற்றில் முதல் புத்தகம் வளைவு (Curve ) களின் பரப்பையும் அவற்றின் அடிப்படைத் தன்மைகளையும், மூன்றாவது புத்தகம் பல தேற்றங்களையும் (Theorems) உள்ளடக்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து, ஆறு, ஏழு ஆகிய புத்தகங்கள் இவருடைய சொந்தக் கருத்துக்களைக் கொண்டவையாகும். தொடுகோட்டின் தன்மைகளைச் சாராமல், செங்கோடுகள் (Normals) என்பவை, கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகலிருந்து ஒரு வளைவுக்கு வரையப்படும் குறைந்த அளவு அல்லது அதிக அளவு எண்ணிக்கையுடைய நேர் கோடுகளாகும்.

தற்போது கூம்பகத்தின் முதல் நான்கு மூலப்புத்தகங்கள் துருக்கிய மொழியிலும் அடுத்த மூன்று புத்தகங்கள் அரபு மொழி பெயர்ப்பிலும் இருக்கின்றன. எட்டாவது புத்தகம் தொலைந்துவிட்டது. அவருடைய மூன்று வகையான வட்ட முகங்களுக்கு நீள்வட்டம் ( ellipse)இ பரப்பளவு (Parabola)இ அதிவளைவு (Hyperbola) என்ற பெயர்களை அறிமுகப்படுத்தினார். இவருடைய மொத்த ஆய்வுக்கட்டுரைகளில் 13 கட்டுரைகள் நமக்குக் கிடைத்துள்ளன. பல ஆய்வுக்கட்டுரைகள் இவர் வெளியிடப்பட்டுள்ளதை அதன் பின் வாழ்ந்த அறிஞர;களின் புத்தகங்களிலிருந்தும், ஆய்வுக் கட்டுரைகளிலிருந்தும் அறிய முடிகிறது. இவர; கி.மு. 190இல் அலெக்சாண்டிரியாவில் காலமானார்.

நூலோதி[தொகு]

  1. Britannica, Vol-1, Encyclopaedia Britannica. Chicago, 1985.
  2. Encyclopaedia Americana, Vol-2, Americana Corporation, Danburg, Connecticut, 1980.

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு : அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் எண்:847
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பலோனியஸ்&oldid=2707208" இருந்து மீள்விக்கப்பட்டது