உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் ஹமீத் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் அமீத் கான்
பிறப்பு1892 (1892)
இறப்பு1965 (அகவை 70–71)
தேசியம்இந்தியன்
பணிஅரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1927 முதல் 1951 வரை

அப்துல் அமீத் கான் (Abdul Hameed Khan) (நவம்பர் 1892-1965) இவர் ஓர் இந்திய வணிகரும், அரசியல்வாதியுமாவார். இவர் சென்னை மாகாண சட்ட மேலவை, சென்னை மாகாண சட்டமன்றம் ஆகியவற்றின் உறுப்பினராகவும், கர்நாடக மாநிலத்தின் திவானாகவும் பணியாற்றினார். 1935-36ல் சென்னையின் முதல் முஸ்லிம் மேயராக பணியாற்றினார். இவர் சென்னையில் உள்ள அமீர் மகாலில் வசித்து வந்தார்.

துவக்க வாழ்க்கை

[தொகு]

இவர் ஒரு பணக்கார வணிகரும், கொடைவள்ளலுமான தாதா கானுக்கு 1894 இல் பிறந்தார். இவரது மூதாதையர்கள் ஆப்கானித்தானில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே இங்கு குடிபெயர்ந்தனர்.

கல்வி

[தொகு]

சென்னை கிறித்தவ கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

தமிழ்நாடு காங்கிரசு குழு செயலாளாராகவும், அகில இந்திய காங்கிரசு குழுவிலும் பணியாற்றிய இவர், 1937 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி சென்னை மாகாண முஸ்லிம் லீக்கில் இணைந்தார். இந்தியப் பிரிவினைக்கும் ஆதரவளித்தார். 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து, இவர் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பினார்.

திவான்

[தொகு]

இவர் கர்நாடக மாநிலத்தின் திவானாகப் பணியாற்றினார். டெக்கான் டைம்ஸ் என்ற நாளிதழின் தலைமை ஆசிரியராகவும் இருந்தார்.

சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்

[தொகு]

1924 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் உறுப்பினர் ஆனார். தொடர்ந்து 1934 - 1935 ஆண்டில் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் ஆனார்.[1]

சென்னை மாகாண மேலவை

[தொகு]

சென்னை மாகாண சட்ட மேலவைக்கு 1950 ஆம் ஆண்டு ஊரக முஸ்லிம் பிரதிநித்துவத்தின் அடிப்படையில் கர்நூல் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

மேலும் பார்க்க

[தொகு]

சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்)களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. சு. முத்தையா, ed. (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 153.
  2. [1] பக்கம் 31 (இரண்டாவது) தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் கையேடு]


முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1935-1936
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_ஹமீத்_கான்&oldid=4015416" இலிருந்து மீள்விக்கப்பட்டது