அப்துல் வாகித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அப்துல் வாகித் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1962 ஆம் ஆண்டு வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பிறப்பு[தொகு]

15 ஜூலை 1910 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அப்துல் ரஹீம் சாஹிப் என்பவருக்கு மகனாக பிறந்தார்.

கல்வி[தொகு]

சென்னை முஹம்மதன் கல்லூரியில் (தற்போதைய காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில்) பி.ஏவும், சென்னை சட்டக்கல்லூரியில் எல்.எல்.பியும் பயின்றார்.

பொறுப்புகள்[தொகு]

  • தொழிலதிபர்;
  • இந்திய அரசின் ஏற்றுமதி ஆலோசனைக் குழு உறுப்பினர் 1948 முதல் 1952 வரை மீண்டும் 1952 முதல் 1954 வரை
  • 1953 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசின் தோல் பொருள் வளர்ச்சி கவுன்சில் உறுப்பினர்
  • 1958 ஆம் ஆண்டு முதல் காதி கிராமிய கைத்தொழில் ஆணையத்தின் தோல் பொருள் வளர்ச்சி ஆலோசனைக் குழு உறுப்பினர்,
  • 1952 ஆம் ஆண்டு முதல் இந்திய தர நிர்ணய சபை புதுடில்லி - இரசாயன பிரிவு , ஆலோசனைக் குழு உறுப்பினர்,
  • 1957 ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் தோல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாகக் குழு,
  • தெற்கு இந்தியா ஸ்கின்ஸ் மற்றும் மறைமாவட்ட வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், சென்னை.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_வாகித்&oldid=2787479" இருந்து மீள்விக்கப்பட்டது