அப்துல் ரஹ்மான் இப்னு இப்ராஹிம் சோரி
அப்துல் ரஹ்மான் இப்னு இப்ராஹிம் சோரி (அரபு மொழி: عبد الرحمن ابن ابراهيم سوري) மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் உள்ள ஃபவுட்டா டிஜல்லான் என்ற பகுதியின் படைத்தலைவராக இருந்தவர். இவர் 1778 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு அடிமையாக விற்கப்பட்டார்.
இவரை அடிமையாக வாங்கிய முதலாளி தாமஸ் ஃபாஸ்டர் இவரை ‘இளவரசர்’ என்று அழைத்து வந்தார். இதுவே பிற்காலத்தில் இவருக்கு புனைபெயராக மாறிவிட்டது.
40 வருடங்கள் அடிமையாக வாழ்க்கையை கழித்தார். 1828 ஆம் ஆண்டு, மொராக்கோ நாட்டு மன்னர் வேண்டுகோளின் படி அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் குவின்சி ஆடம்ஸ் மற்றும் செயலாளர் ஹென்றி க்ளே உத்தரவால் விடுதலை செய்யபட்டார்.
வாழ்க்கை
[தொகு]அப்துல் ரஹ்மான் இப்னு இப்ராஹிம் சோரி 1762 ஆம் ஆண்டு கினியாவில் உள்ள டிம்போ எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை இப்ராஹிம் சோரி, டிம்போவை தலைநகரமாக கொண்டு, ஃபுட்டா ஜல்லான் எனும் பகுதியை ஆண்டு வந்த இஸ்லாமியர் ஆவார்.[1]
அப்துல் ரஹ்மான் இப்னு இப்ராஹிம் சோரி இஸ்லாமிய அறிவியல் பயின்றவர். நான்கு ஆப்பிரிக்க மொழிகள் தெரிந்தவர். மேலும் அரேபிய, ஆங்கில மொழியையும் கற்றறிந்தவர்.
கல்வி பயின்றபின் தனது சொந்த ஊரான டிம்புக்து திரும்பியவர் 1781 ஆம்த ஆண்டு, தனது தந்தை இப்ராஹிம் சோரியின் இராணுவ படையில் சேர்ந்தார்.
தனது 26-ஆம் வயதில் படை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். 1788 ஆம் ஆண்டு, தந்தையின் ஆணைக்கு இணங்க பம்பாரா எனும் பகுதியை பாதுகாக்கவும் அங்கு பொருளாதாரத்தினை மேம்படுத்தவும் 2000 படை வீரர்களுடன் சென்றார்.
இந்த படையெடுப்பின்போது அப்துல் ரஹ்மான் சோரி சிறைபிடிக்கப்பட்டு ஆங்கிலேயரிடம் அடிமையாக விற்கப்பட்டார்.பிறகு அமெரிக்காவில் உள்ள நாட்சேஸ்- மிசிசிப்பியில், தாமஸ் ஃபாஸ்டர்க்கு சொந்தமான பருத்தி ஆலையில் 40 வருடங்கள் அடிமையாக பணியாற்றினார்.
தாமஸ் ஃபாஸ்டர் பருத்தி ஆலையில் மற்றொரு அடிமையாக பணிபுரிந்த இசபெல்லா என்பவரை 1794-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு ஐந்து ஆண் குழந்தைகளும் நான்கு பெண் குழந்தைகளும் பிறந்தனர். அவர்கள் அனைவரும் அதே பருத்தி ஆலையில் அடிமைகளாகவே பணிபுரிந்து வந்தனர்.[2]
அப்துல் ரஹ்மான் சோரியின் திறமையையும் ஆலையில் அவர் பணிபுரியும் திறனையும் கண்ட அவரது முதலாளி அவரை அந்த ஆலையின் தலைமை பொறுப்பினை கொடுத்தார். இதனை பயன்படுத்தி, அந்த பருத்தி ஆலையிலே சொந்தமாக சிறிய காய்கறி தோட்டத்தினை உருவாக்கினார். அதன் மூலம் கிடைக்கும் காய்கறிகளை அருகில் உள்ள உள்ளூர் சந்தையில் விற்று பணம் சேர்த்து வந்தார்.
காலக்கோடு
[தொகு]வருடம் | நிகழ்வு |
---|---|
1762 | பிறப்பு |
1776 | இஸ்லாமிய அறிவியல் கல்வி பயின்றார் |
1781 | படிப்பு முடிந்த பின் தந்தையின் இராணுவ படையில் சேர்ந்தார் |
1788 | தன் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த படை 2000 வீரைகளுடன் எல்லை நோக்கி பயணம் |
1788 | ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்டார் |
1794 | இசபெல்லாவை திருமணம் செய்தார் |
1829 | இறப்பு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shareef, Muhammad (2004). "The Lost and Found Children of Abraham in Africa and the American Diaspora" (PDF). siiasi.org. Sankore Institute of Islamic African Studies International (SIIASI). பார்க்கப்பட்ட நாள் 12 November 2016.
- ↑ "Prince Among Slaves". PBS. Archived from the original on February 14, 2008.
- Austin, Allan (1997). African Muslims in Antebellum America (5th ed.). New York, NY: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-91269-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Diouf, Sylviane (1998). Servants of Allah: African Muslims Enslaved in the Americas. New York and London: New York University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8147-1905-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)