அப்துல் காதீர் கான்
ஏ. கே. கான் என்று அழைக்கப்படும் அப்துல் காதீர் கான் (பிறப்பு: ஏப்ரல் 1, 1936- இறப்பு:10 அக்டோபர் 2021), ஒரு பாக்கித்தான் கட்டுரையாளர், அணுக்கரு இயற்பியலாளர் மற்றும் ஒரு உலோகவியல் பொறியியலாளர் ஆவார், இவர் பாக்கித்தானின் அணுகுண்டு திட்டத்திற்கான யுரேனியம் செறிவூட்டுதல் திட்டத்தை நிறுவினார். ஏ.கே கான் 1976 இல் ககூதா ஆராய்ச்சி ஆய்வகங்களை நிறுவினார், 2001 ல் ஓய்வு பெறும் வரை அதன் மூத்த விஞ்ஞானியாகவும் மற்றும் தலைவராக பணியாற்றினார். கான் மற்ற பாக்கித்தானிய தேசிய அறிவியல் திட்டங்களிலும் ஒரு அங்கமாக இருந்தார், மூலக்கூறு உருவவியல் மார்டென்சைட் உலோகக்கலவைகளின் இயற்பியல், அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் மற்றும் பொருள் இயற்பியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி பங்களிப்புகளை வழங்கினார்.
இவர் அணு ஆயுத தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு வழங்கியதாக அமெரிக்க அரசாங்கம் பாக்கித்தானுக்கு வழங்கிய ஆதாரங்களுக்குப் பின்னர் சனவரி 2004 இல், பாக்கித்தான் அரசாங்கம் இதைப்பற்றிய விளக்கமளிக்க கானை அழைத்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கைகளுக்கான தனது பொறுப்பை முறையாக ஒப்புக்கொண்டார்.[1][2] கானின் நடவடிக்கைகளுக்கு பாக்கித்தான் அதிகாரிகள் அனுமதி அளித்தார்கள் என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது.[3][4]
பல ஆண்டு அதிகாரப்பூர்வ வீட்டுக் காவலுக்குப் பின்னர், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், 2009 பிப்ரவரி 6 அன்று இவரை விடுதலை செய்தது, இதனால் இவர் நாட்டிற்குள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டார். இத்தீர்ப்பை தலைமை நீதிபதி சர்தார் முகம்மது அஸ்லாம் வழங்கினார்.[5] செப்டம்பர் 2009 இல், இந்தத் தீர்ப்பு கான் மீதான அனைத்து பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாலும், கான் இன்னும் "தீவிர ஆபத்தில்தான் உள்ளார்" என்று அமெரிக்கா எச்சரித்தது.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இவர் பிரித்தானிய இந்தியாவின் போபாலில் உள்ள பஷ்தூன் குடும்பத்தில்[6][7][8][9][10] இவரது தாய் சுலேகா பேகம் ஒரு இல்லத்தரசி ஆவார். அவரது தந்தை, அப்துல் கபூர், நாக்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவரும், இந்திய கல்வி அமைச்சகத்தில் பணியாற்றிய கல்வியாளருமாவார். பின்னர் அவர் 1935 இல் ஓய்வு பெற்ற பிறகு போபால் மாநிலத்தில் குடும்பத்துடன் குடியேற்றினார்.[11] 1947 இல் இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர், அவரது குடும்பம் 1952 இல் இந்தியாவிலிருந்து பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்து, சிந்துவின் கராச்சியில் குடியேறியது. தயாராம் ஜெதமால் சிந்து அரசு அறிவியல் கல்லூரி சுருக்கமாக டி.ஜே அறிவியல் கல்லூரியில் பயின்ற அவர் இயற்பியல் படிப்பதற்காக 1956 இல் கராச்சி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[12][13] 1960 ஆம் ஆண்டில், அவர் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இதனுடன்கணிதத்தில் ஒரு சிறிய பட்டம், மற்றும் திட நிலை இயற்பியலில் பட்டமும் பெற்றார். .
ஒரு குறுகிய காலத்திற்கு, இவர் நகர அரசாங்கத்தின் அளவையியல் ஆய்வாளராக பணியாற்றினார்.[6] 1961 ஆம் ஆண்டில், இவர் பெர்லினில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உலோகவியல் படிப்பதற்காக ஜெர்மனிக்குச் சென்றார், ஆனால் 1965 இல் நெதர்லாந்தில் உள்ள டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் செய்தார். அங்கு இவர் 1967 இல் தொழில்நுட்பத்தில் பொறியியலாளர் பட்டம் பெற்றார். ( அறிவியலில் முனைவருக்கு சமம்) பின்னர் முனைவர் பட்ட படிப்புகளுக்காக இலியூவன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு மார்ட்டின் பிராபர்ஸ் என்பவரின் மேற்பார்வையில், இவர் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1972 இல் உலோகவியல் பொறியியலில் பட்டம் பெற்றார்.[13] இவரது முனைவர் ஆய்வறிக்கையில் மார்டென்சைட் பற்றிய அடிப்படை பணிகள் மற்றும் உருவவியல் துறையில் அதன் விரிவாக்கப்பட்ட தொழில்துறை பயன்பாடுகள் ஆகியவை அடங்கும்.
அணு ஆயுதத் திட்டத்தில் இவர் பணியாற்றிய காலத்தில், வெப்ப குவாண்டம் புலம் மற்றும் அமுக்கப்பட்ட இயற்பியலில் ஆராய்ச்சிக்கு முன்னோடியாக இருந்தார். அதே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட இயற்பியல் அமைப்பில் மிகவும் நிலையற்ற ஐசோடோபிக் துகள்களின் வேதியியல் எதிர்வினைகள் குறித்த இணைக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[14]
இறப்பு
[தொகு]பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று கூறப்பட்ட அப்துல் கதீர் கான் 10 அக்டோபர் 2021 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இஸ்லாமாபாத்தில் காலமானார். அவருக்கு வயது 85. ஏ.க்யூ. கான் என்று பரவலாக அறியப்பட்ட அப்துல் கதீர் கான் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகராக உள்ள போபால் நகரத்தில் பிறந்தவர். கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று ஏற்பட்ட ஏ.க்யூ.கான் உடல் நிலை அதன் பிறகு சீர்கெட்டது.[15]
குறிப்புகள்
[தொகு]- ↑ "A.Q. Khan & Iran". Global Security. http://www.globalsecurity.org/wmd/world/iran/khan-iran.htm. பார்த்த நாள்: 24 November 2014.
- ↑ NY Times Staff. "Chronology: A.Q. Khan". NY Times. https://www.nytimes.com/2006/04/16/world/asia/16chron-khan.html. பார்த்த நாள்: 24 November 2014.
- ↑ "Mush helped proliferate N-technology : AQ Khan". http://articles.economictimes.indiatimes.com/2008-07-06/news/27723085_1_aq-khan-nuclear-proliferation-nuclear-technology.
- ↑ "AQ Khan".
- ↑ "IHC declares Dr A Q Khan a free citizen". GEO.tv. 6 February 2009. Archived from the original on 15 April 2012. பார்க்கப்பட்ட நாள் 26 September 2010.
- ↑ 6.0 6.1 "Dr. Abdul Qadeer Khan". storyofpakistan.com/. Islamabad: Story of Pakistan Press Foundation. 17 October 2013. p. 1. பார்க்கப்பட்ட நாள் 22 January 2015.
- ↑ "People sacrificed their lives for Pakistan" (3 May 2014), The Pak Banker, p. 2. Retrieved 25 February 2019.
- ↑ "Pakistan's nuclear guru under suspicion". 28 January 2004.
- ↑ "The mysterious world of Pakistan's Dr Strangelove". 7 February 2004.
- ↑ Bowcott, Owen (6 February 2009). "Profile: Abdul Qadeer Khan". the Guardian.
- ↑ "Dr. Abdul Qadeer Khan, Founder and Ex-Chairman Dr. A Q Khan Research Laboratories". Pakistanileaders. Archived from the original on 29 September 2010. பார்க்கப்பட்ட நாள் 26 September 2010.
- ↑ "Karachi University Physics Department alumni". Karachi University. பார்க்கப்பட்ட நாள் 22 January 2015.
- ↑ 13.0 13.1 "About Khan's education, achievements and research". Dr. A. Q. Khan. Archived from the original on 5 March 2009. பார்க்கப்பட்ட நாள் 30 August 2007.
- ↑ "Frontiers in Physics" (PDF). 13 December 1988. Proceedings of the Second National Symposium on Frontiners in Physics. Archived from the original (PDF) on 23 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 16 January 2012.
- ↑ 'பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை' அப்துல் கதீர் கான் மரணம்