அப்துல் காதிர் முல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் காதர் முல்லா
Abdul Quader Molla
தாய்மொழியில் பெயர்আবদুল কাদের মোল্লা
பிறப்பு(1948-08-14)14 ஆகத்து 1948
அமிராபாது, பரித்பூர், கிழக்கு பாக்கிஸ்தான் (இன்றைய வங்காளதேசம்)
இறப்பு12 திசம்பர் 2013(2013-12-12) (அகவை 65)
சிற்றறைச் சிறை, வங்காளதேசம்
இறப்பிற்கான
காரணம்
தூக்கிலிடப்பட்டார்
கல்லறைபரித்பூர், வங்காளதேசம்
படித்த கல்வி நிறுவனங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
பணிஊடகவியலாலர்
பணியகம்டெய்லி சங்ரம் பத்திரிகையின் நிருவாக ஆசிரியர்
அமைப்பு(கள்)ஜமாத்-இ-இசுலாமி
அறியப்படுவதுஅரசியல், ஊடகவியல்
சமயம்இசுலாம்
குற்றச்செயல்வங்கதேச விடுதலைப் போரில் வன்கலவி, மற்றும் இனப்படுகொலைகள். 344 பொதுமக்களைக் கொலை செய்தமை.[1][2]
Criminal penaltyதூக்குத் தண்டனை[3]
வாழ்க்கைத்
துணை
சனோரா ஜகான்

அப்துல் காதர் முல்லா (Abdul Quader Molla, வங்காள மொழி: আবদুল কাদের মোল্লা; 14 ஆகத்து 1948[4] – 12 டிசம்பர் 2013)[3] என்பவர் வங்கதேசத்தின் அரசியல்வாதி. 1971 வங்கதேச விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்கள் இழைத்ததாக இவர் குற்றம் சாட்டப்பட்டு,[5] 2013 டிசம்பர் 12 இல் தூக்கிலிடப்பட்டார்.[6] இவர் ஜமாத்-இ-இசுலாமி கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.[5][7]

'த டெய்லி சங்கிரம்' என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1986 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் வங்காளதேசத் தேர்தலில் பரிதாபாத்-4 தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். வங்கதேச விடுதலைப் போரில் 344 பொதுமக்களைக் கொன்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். செப்டம்பர் 17, 2013 அன்று வங்கதேச பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயம் இவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.[8] ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.[9] 2013 செப்டம்பர் 17 இல் வங்கதேச உச்சநீதிமன்றம் இவரது ஆயுள்தண்டனையை தூக்குத்தண்டனையாக மாற்றித் தீர்ப்பளித்தது.[10][11] வங்காளதேச விடுதலைப் போரில் போர்க்குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்ட முதலாவது நபர் இவராவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் 1948-ல் அமிராபாத் என்னும் கிராமத்தில் பிறந்தார். கிராமத்தில் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் 1966 முதல் 1968 வரை ராஜேந்திரா கல்லூரியில் அறிவியல் பட்டப்படிப்பு படித்தார். படிக்கும் போது ஜமாத்-இ-இசுலாமி கட்சியின் மாணவர் பிரிவில் சேர்ந்தார். பின்னர் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1971-ல் ஜமாத்-இ-இசுலாமி தலைவர்கள் வங்கதேச விடுதலைப் போரை எதிர்த்தனர்.[5][12][13] வங்கதேசம் விடுதலை அடைந்த பின்னர் ஜமாத்-இ-இசுலாமி கட்சி தடை செய்யப்பட்டது. சேக் முஜிபுர் ரகுமானின் படுகொலைக்குப் பின்னர் வந்த ராணுவ அரசு ஜமாத்-இ-இசுலாமியக் கட்சியை மீண்டும் அரசியலில் அனுமதித்தது. இவர் அக்கட்சியின் துணைத்தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Summary of verdict in Quader Mollah case". The Daily Star. 6 February 2013. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=268072. பார்த்த நாள்: 11 December 2013. 
  2. Tahmima Anam (13 February 2013). "Shahbag protesters versus the Butcher of Mirpur". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 11 December 2013.
  3. 3.0 3.1 Quader Molla hangs finally for war crimes bdnews24. 12 December 2012.
  4. Macpherson, Caroline (5 February 2013). "ICT convicts A. Q. Molla of 5 charges and sentences him to life imprisonment". International law bureau இம் மூலத்தில் இருந்து 12 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131212121953/http://www.internationallawbureau.com/index.php/ict-convicts-a-q-molla-of-5-charges-and-sentences-him-to-life-imprisonment/. 
  5. 5.0 5.1 5.2 "Summary of verdict in Quader Mollah case". The Daily Star (Bangladesh). 6 February 2013. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=268072. பார்த்த நாள்: 6 February 2013. 
  6. "Bangladesh hangs Islamist leader despite U.N. objections". சிஎன்என். 13 டிசம்பர் 2013. http://www.cnn.com/2013/12/12/world/asia/bangladesh-islamist-hanging/index.html. 
  7. "Bangladesh jails Islamic party leader for life". தி கார்டியன். 5 பெப்ரவரி 2013. http://www.guardian.co.uk/world/2013/feb/05/bangladesh-jails-islamic-leader. பார்த்த நாள்: 6 February 2013. 
  8. http://bdnews24.com/bangladesh/2013/09/17/quader-molla-to-go-to-the-gallows-for-murders
  9. "Huge Bangladesh rally seeks death penalty for War Crimes". பிபிசி. 8 பெப்ரவரி 2013. http://www.bbc.co.uk/news/world-asia-21383632. பார்த்த நாள்: 9 February 2013. 
  10. "Case history". Supreme Court. Archived from the original on 21 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Mirpur butcher Molla must die, says SC". bdnews24. 17 September 2013. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.
  12. The Economist, 1 July 2010, accessed 7 March 2013.
  13. Philip Hensher (19 February 2013). "The war Bangladesh can never forget". The Independent. http://www.independent.co.uk/news/world/asia/the-war-bangladesh-can-never-forget-8501636.html#. பார்த்த நாள்: 26 February 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_காதிர்_முல்லா&oldid=3791409" இலிருந்து மீள்விக்கப்பட்டது