அப்துல் காதர் ஜமாலி சாகிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
AK Jamali MLA.png

அப்துல் காதர் ஜமாலி சாகிப் 25டிசம்பர்1922 ஆம் ஆண்டு அரசியல்வாதி ஆவார். பெரம்பலூர் மாவட்டம் இலப்பைகுடிக்காடு பேரூராட்சியில் பிறந்தார்.

பிறப்பு[தொகு]

அஹமது புகாரி ஜெய்த்தூன் பீவி தம்பதியரின் நான்காவது மகனாகப் பிறந்தார்.

கல்வி[தொகு]

தொடக்க மற்றும் இடை நிலைக்கல்வியை உள்ளூரிலேயே பயின்ற இவர் சென்னை பெரம்பூரில் செயல் பட்டுவரும் ஜமாலியா அரபுக்கல்லூரியில் ஓதி ஜமாலி என்ற பட்டம் பெற்றார், இதனாலேயே இவரை ஜமாலி என்றே மக்கள் அழைக்களாயினர்.

மேலும் திருவையாற்றிலுள்ள தமிழ்க்கல்லூரியில் பயின்று தமிழில் (வித்வான்) புலவர் பட்டம் பெற்றார். தமிழக முஸ்லிம் லீக் தலைவர்களிலேயே தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர் இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமால் முகமது கல்லூரி திறப்பின்போது[தொகு]

11-7-1951 ஆம் ஆண்டு ஜமால் முகமது கல்லூரி தொடங்கப்பட்ட நேரத்தில் அன்றைய முதல்வர் குமாரசாமி ராஜா,ஆளுனர் பாவ்நகர்வாலா மற்றும் அவர் மனைவி,காஜாமியான் ராவுத்தர்,புரவலர் செய்யது இப்ராஹிம்,ஜமால் முகமது மகனார் ஜமால் முகைதீன்,காயிதேமில்லத் தம்பி KTM அகமது இப்ராஹிம் மற்றும் AK ஜமாலி சூழ நடுவில் காயிதேமில்லத்.

பத்திரிக்கை ஆசிரியராக[தொகு]

முஸ்லிம் லீக் மற்றும் மறுமலர்ச்சி_(சிற்றிதழ்) பத்திரிக்கைகளில் ஆசிரியராகவும், பங்குதாரராகவும் செயல்பட்டவர்.

அரசியல் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்[தொகு]

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். கட்சியின் கிளைப்பொறுப்புகளில் துவங்கி மாநில பொறுப்புவரை அனைத்து மட்டத்திலும் பணியாற்றினார். அன்றைய சென்னை மாகணத்தின் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினரானார். [1]

தமிழ்நாடு முஸ்லிம் லீக்கில்[தொகு]

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1973 ஆம் ஆண்டு நாவலர் அ. மு. யூசுப் சாகிப்புடன் இணைந்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற கட்சியை துவங்கினார்.

நாடு பிரிவிணையின் போது[தொகு]

நாடு பிரிவிணையின் போது டிசம்பர் 13,14 ஆகிய தேதிகளில் 1947ல் கராச்சி நகரில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுடன் சென்னை மாகாணப் பிரதிநியாக கலந்து கொண்ட ஐவரில் ஒருவராக இவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில[தொகு]

இறப்பு[தொகு]

உடல் நலிவுற்றிருந்த ஜமாலி சாகிப் அவர்கள் 12 ஏப்ரல் 1996 ஆம் ஆண்டு தன்னுடைய 74 வயதில் மரணமுற்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. சட்டமன்ற கையேடு 1950