அப்துல் கரீம் பரேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் கரீம் பரேக்
பிறப்புஏப்ரல் 15, 1928(1928-04-15)
கன்சியோனி, மகாராஸ்டிரா, இந்தியா
இறப்பு11 செப்டம்பர் 2007(2007-09-11) (அகவை 79)
நாக்பூர், மகாராஸ்டிரா, இந்தியா
வாழ்க்கைத்
துணை
சுபேதா
அமீனா
விருதுகள்பத்ம பூஷன்

அப்துல் கரீம் பரேக் (Abdul Karim Parekh) (1928-2007) பிரபலமாக மௌலானா என அழைக்கப்படுவார். இவர் ஓர் இந்திய சமூக சேவகர் மற்றும் அறிஞர். இவர்திருகுர்ஆனை உருது மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்தார். இதனால் இவர் பெரிதும் அறியப்பட்டார்.[1] மேலும் இவர் பல இஸ்லாமிய சமய புத்தகங்களை எழுதியுள்ளார். [2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

1928 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் கன்சியோனி கிராமத்தில் பிறந்தார். அப்துல் லத்தீப் மற்றும் ஹனிஃபா ஆகியோர் இவரின் பெற்றோர்கள் ஆவார். இந்த தம்பதிக்கு பிறந்த 13 குழந்தைகளில் மூன்றவதாக பிறந்தவர் தான் கரீம். இவர் ஆரம்ப பள்ளிப் படிப்பில் பாதியிலே நிறுத்திக் கொண்டார். பிறகு கூலி தொழிலாளியாக வேலை செய்துக் கொண்டே தானாகவே கல்வி கற்றுக் கொண்டார். [3] இந்த நிலையில் தான் இவர் குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார். இது 40 முறை மறு அச்சிட்டு விற்பனையானது. [4]

விருதுகள்[தொகு]

கரீம் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிறுவன பொருளாளராக இருந்தார். இவருக்கு அமெரிக்காவின் முஸ்லிம் கூட்டமைப்பு "பிரைட் ஆஃப் இந்தியா " என்ற விருதை வழங்கி கவ்ரவித்தது. 2001 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்மா பூஷன் விருதை சமூகத்திற்கு இவர் ஆற்றிய சேவைக்காக வழங்கியது.[5]

இறப்பு[தொகு]

இவர் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று இறந்தார். அப்போது இவருக்கு 79 வயது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Padma Bhushan Maulana Abdul Karim Parekh". Getlisted UAE. 2016. 28 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "On Peace TV". Peace TV. 2016. 28 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Family Background" (PDF). Biography. 2016. 28 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Maulana Abdul Karim Parekh passes away". Two Circles. 11 September 2007. 29 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. 15 November 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 January 2016 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கரீம்_பரேக்&oldid=3332017" இருந்து மீள்விக்கப்பட்டது