உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் கதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் காதிர்
Abdul Qadir
1990 இல் காதிர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அப்துல் காதிர் கான்
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாளர்
பந்துவீச்சு நடைவலக்கை சுழல்பந்தாளர்
பங்குபந்து வீச்சாளர்
உறவினர்கள்உசுமான் காதிர் (மகன்)
உமர் அக்மல் (மருமகன்)[1]
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 78)14 திசம்பர் 1977 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு6 திசம்பர் 1990 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 43)11 சூன் 1983 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப2 நவம்பர் 1993 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப மு.த ப.அ
ஆட்டங்கள் 67 104 209 147
ஓட்டங்கள் 1029 641 3740 869
மட்டையாட்ட சராசரி 15.59 15.26 18.33 14.01
100கள்/50கள் 0/3 0/0 2/8 0/0
அதியுயர் ஓட்டம் 61 41* 112 41*
வீசிய பந்துகள் 17126 5100 49036 7014
வீழ்த்தல்கள் 236 132 960 202
பந்துவீச்சு சராசரி 32.80 26.16 23.24 23.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
15 2 75 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
5 n/a 21 n/a
சிறந்த பந்துவீச்சு 9/56 5/44 9/49 5/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/– 21/– 83/– 92/–
மூலம்: ESPNcricinfo, 9 சனவரி 2019

அப்துல் காதிர் கான் (Abdul Qadir Khan, உருது: عبد القادر خان‎, 15 செப்டம்பர் 1955 – 6 செப்டம்பர் 2019)[2] பாக்கித்தானிய பன்னாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் முக்கியமாக பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்தார்.[3] இவர் பிற்காலத்தில் விளையாட்டு வர்ணனையாளராகவும், பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியத்தின் தலைமைத் தேர்வாளராகவும் பணியாற்றி வந்தார்.

காதிர் பாக்கித்தான் தேசிய அணிக்காக 1977 முதல் 1993 வரை 67 தேர்வுப் போட்டிகளிலும், 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடினார். ஐந்து ஒருநாஅள் போட்டிகளில் தலைவராகவும் விளையாடினா. 1987 இல் இங்கிலாந்துக்கு எதிராக பாக்கித்தானில் நடைபெற்ற மூன்று ஆட்டங்கள் தேர்வுத் தொடரில் 437 ஓட்டங்களைக் கொடுத்து 30 இலக்குகளைக் கைப்பற்றினார். இதே தொடரில் கடாபி அரங்கில் ஒரு பகுதி ஆட்டத்தில் 56 ஓட்டங்களைக் கொடுத்து 9 இலக்குகளைக் கைப்ப்ற்றினார். பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில், இலங்கைக்கு எதிரான 1983 உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் 44 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Umar Akmal in trouble over wedding celebrations". The National. 16 April 2014. https://www.thenational.ae/sport/umar-akmal-in-trouble-over-wedding-celebrations-1.452506. 
  2. "Pakistan's Abdul Qadir dies aged 63". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
  3. "Player profile: Abdul Qadir". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 21 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கதிர்&oldid=2799947" இலிருந்து மீள்விக்கப்பட்டது