உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல்லா மிர்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்துல்லா மிர்சா என்பவர் சாருக்கின் பேரன் ஆவார். இவரது தந்தை இப்ராகிம் சுல்தான். இவர் தைமூரிய பேரரசை ஆட்சி செய்தார்.

இவர் உலுக் பெக்கின் ஆதரவாளராக இருந்த காரணத்தால் அப்துல் லத்தீப்பால் சிறையில் அடைக்கப்பட்டார். அப்துல் லத்தீப் கொல்லப்பட்டபோது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சமர்கண்டின் ஆட்சியாளராக்கப்பட்டார். இதற்காக இவர் தனக்கு ஆதரவளித்த துருப்புகளுக்காக பெரும் பணத்தை செலவழித்தார். இருந்தபோதிலும் பிரபலமான நபராக இவர் இருக்கவில்லை.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லா_மிர்சா&oldid=3328880" இலிருந்து மீள்விக்கப்பட்டது