உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல்லா புகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல்லா புகாரி
ஷாகி இமாம்
ஜமா மஸ்ஜித்,டெல்லி.
பதவியில்
8 சூலை 1973 – 14 அக்டோபர் 2000

அப்துல்லா புகாரி (Abdullah Bukhari) தில்லி ஜமா மஸ்ஜித்-இன் பன்னிரண்டாவது ஷாஹி இமாம் ஆவார்.[1][2][3][4]

தொடக்ககால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

ராஜஸ்தானில் பிறந்த இவர் 1946-இல் ஜமா மஸ்ஜித்தின்(பள்ளிவாசல்) துணை(நைப்)ஷாஹி இமாம்-ஆக நியமிக்கப்பட்டார். பதினொன்றாம் ஷாகி இமாம் ஆன சையது ஹமீது புக்காரிக்குப் பிறகு, 1973-ஜூலை 8 அன்று இவர் ஷாஹிது இமாமாக நியமிகப்பட்டார்.[1][5]

அரசியல் ஈடுபாடு

[தொகு]

இந்தியாவின் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1977-ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தியை தோல்வியுறச்செய்த பின்னர்,இந்தியாவின் துணைத்தலைவர் பதவியை அவருக்கே வழங்கினார்.[6] 1975-இல் இந்திய அவசரகால பிரகடனத்தை எதிர்த்த வலுவான குரல்களில் இவரும் ஒருவர் ஆவார். முஸ்லீம்களை சாடி விதை நாண் அறுவை சிகிச்சை செய்யும்படி கேட்டபொழுது அவர் அவர்களை எதிர்த்தார்.[1]

மறைவு

[தொகு]

சையது அப்துல்லாஹ் புகாரி, 2009 ஆம் ஆண்டு சூன் 9 ஆம் நாள் அன்று சுவாசக்கோளாறு,இதயம் மற்றும் சிறுநீரகப்பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஒரு மாதம் கடந்த நிலையில் ஜூலை 8-ஆம் தேதி மாரடைப்பினால் இறந்தார்.அந்நாளிலேயே தில்லியின் சுவர்நகரத்திலே ,குடும்ப புதைகுழியிலே அடக்கம் செய்யப்பட்டார்.இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் இரு மகள்கள் இருந்தனர்.இவரது மகன் அகமது புகாரிதான் ஜமா மஸ்ஜித்தின் தற்போதைய ஷாஹி இமாம் ஆவார்.[7][8] பிரிவினையைத் தொடர்ந்து கலவரக்காரர்களிடமிருந்து முஸ்லிம்களை மீட்பதற்காக அவர் தனது உயிரைப் பணயம் வைத்தாரென்றும்,அவர்கள்தம் நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்காக ஏற்பாடுகளைச் செய்தாரென்றும்,நாட்டில் அவர்கள் தொடர்ந்து இருக்க அவர்களை ஊக்குவிதாரென்றும் 'தி இந்து'-நாளிதழ் கூறுகின்றது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Profile and obituary of Syed Abdullah Bukhari தி இந்து newspaper
  2. Ex-Shahi Imam of Delhi Jama Masjid dies at 87 on Dawn newspaper
  3. "Abdullah Bukhari, the legend of JAMA Masjid, is dead". 8 July 2009.
  4. "Shahi Imam Abdullah Bukhari passes away". 8 July 2009.
  5. "Jama Masjid". Archived from the original on 2011-11-17. பார்க்கப்பட்ட நாள் 2021-01-02.
  6. "The Rediff Interview/Shahi Imam Syed Ahmed Bukhari". rediff.com website.
  7. "Abdullah Bukhari, 87, dead". 9 July 2009.
  8. Smith, R. V. (27 April 2014). "Imams of Delhi's royal mosque". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/society/imams-of-delhis-royal-mosque/article5951174.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லா_புகாரி&oldid=3541062" இலிருந்து மீள்விக்கப்பட்டது