அப்தீன் அரண்மனை

ஆள்கூறுகள்: 30°02′30″N 31°14′54″E / 30.04167°N 31.24833°E / 30.04167; 31.24833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்தீன் அரண்மனை
அரண்மனையின் பிரதான முகப்பு.
அப்தீன் அரண்மனை is located in Egypt
அப்தீன் அரண்மனை
Egypt இல் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
நகரம்அப்தின் சதுக்கம்
கெய்ரோ
நாடு எகிப்து
ஆள்கூற்று30°02′30″N 31°14′54″E / 30.04167°N 31.24833°E / 30.04167; 31.24833
கட்டுமான ஆரம்பம்1863
செலவு2,700,000 எகிப்திய பவுண்ட்
தொழில்நுட்ப விபரங்கள்
அளவு44 பெடான்கள்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் ரூசோ

அப்தீன் அரண்மனை (Abdeen Palace) என்பது கெய்ரோவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று அரண்மனையாகும். மேலும், இது எகிப்தின் குடியரசுத்தலைவரின் அலுவலகக் குடியிருப்புகள் மற்றும் முக்கிய பணியிடங்களில் ஒன்றாகும்.

கண்ணோட்டம்[தொகு]

சுல்தான் முகமது அலி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் அல்பேனிய தளபதியும் எகிப்தின் அரசியல்வாதியுமான, அப்தீன் பே என்பவரின் மரணத்திற்குப் பிறகு, அவரின் பெயரிடப்பட்ட அப்தீன் அரண்மனை கெய்ரோவில் அவர் வசிக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அதன் அலங்காரங்கள், ஓவியங்கள், தூய தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஏராளமான கடிகாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிக அருமையான அரண்மனைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கெய்ரோவின் கோட்டைக்கு பதிலாக ( இடைக்காலம் முதல் எகிப்திய அரசாங்கத்தின் மையமாக இருந்த) எகிப்தின் உத்தியோகபூர்வ அரசாங்க தலைமையகமாக இசுமாயில் பாஷாவின் ஆட்சியின் கீழ் கட்டப்பட்ட இந்த அரண்மனை பல உத்தியோகபூர்வ நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.

இதன் கட்டுமானம் 1863 இல் தொடங்கி 10 ஆண்டுகள் தொடர்ந்தது. மேலும், அரண்மனை அதிகாரப்பூர்வமாக 1874 இல் திறக்கப்பட்டது. 24 பெடான்கள் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த அரண்மனையை பிரெஞ்சு கட்டடக் கலைஞர் லியோன் ரூசோவும் ஏராளமான எகிப்திய, இத்தாலிய, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய வடிமைப்பாளர்களும் வடிவமைத்தனர். இருப்பினும், அரண்மனையின் தோட்டம் 1921 ஆம் ஆண்டில் சுல்தான் முதலாம் புவாத்தால் 20 பெடான்கள் பரப்பளவில் சேர்க்கப்பட்டது. அரண்மனையை நிர்மாணிப்பதற்கான செலவு 700,000 எகிப்திய பவுண்டுகளை எட்டியது. கூடுதலாக 2 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் அதன் அலங்காரத்திற்காக செலவு செய்யப்பட்டது. நான்கு அரண்மனைகளுக்கு இடையில், புவாது மன்னன் ஒரு பாரிசிய தளவாடங்கள் உற்பத்தி நிறுவனமான லிங்கே & சீ உடன் 18 மில்லியனுக்கும் அதிகமான பிரெஞ்சு பிராங்குகளை செலவிட்டார். [1] அரண்மனையின் மாற்றம், பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்காக தொடர்ச்சியான ஆட்சியாளர்களால் அதிக பணம் செலவிடப்பட்டது. அரண்மனையில் 500 அறைத்தொகுதிகள் உள்ளன.

அருங்காட்சியகம்[தொகு]

அரண்மனை இன்று ஒரு அருங்காட்சியகமாக இருக்கிறது. இது பழைய கெய்ரோ மாவட்டமான அப்தினில் அமைந்துள்ளது. மேல் மாடிகள் (அரச குடும்பத்தின் முன்னாள் வசிப்பிடங்கள்) வெளிநாட்டு பிரமுகர்களை பார்வையிட ஒதுக்கப்பட்டுள்ளன. கீழ் தளங்களில் வெள்ளி அருங்காட்சியகம், ஆயுத அருங்காட்சியகம், அரச குடும்ப அருங்காட்சியகம், அதிபரின் பரிசுகளுக்கான அருங்காட்சியகம் உள்ளன. ஒரு புதிய அருங்காட்சியகம், வரலாற்று ஆவண அருங்காட்சியகம் ஆகியவை 2005 சனவரியில் திறக்கப்பட்டது. மற்ற ஆவணங்களுக்கிடையில், முகம்மது அலியும் அவரது குடும்பத்தினரின் ஆட்சியை நிறுவிய உதுமானியப் பேரரசின் அல்லது ஆணையும், குறுகிய கால தென் அமெரிக்க இராச்சியமான அரக்கானியா மற்றும் படகோனியாவின் கிரீடத்திற்கான சான்றிதழும் இதில் உள்ளன.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Christopher Payne, ‘François Linke 1855-1946, The Belle Époque of French Furniture’, Antique Collector’s Club 2003, p.269

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்தீன்_அரண்மனை&oldid=3484712" இருந்து மீள்விக்கப்பட்டது