உள்ளடக்கத்துக்குச் செல்

அப்தாசா தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்தாசா தாலுகா
அப்தசா-நலியா தாலுகா
அப்தசா தாலுகா, அப்ரசா தாலுகா
தாலுகா
அப்தாசா தாலுகா is located in குசராத்து
அப்தாசா தாலுகா
அப்தாசா தாலுகா
குஜராத்து, இந்தியாவில் அமைந்துள்ள இடம்
அப்தாசா தாலுகா is located in இந்தியா
அப்தாசா தாலுகா
அப்தாசா தாலுகா
அப்தாசா தாலுகா (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°15′N 069°00′E / 23.250°N 69.000°E / 23.250; 69.000
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்கட்ச் (கச்சு)
மக்கள்தொகை
 (2001)
  மொத்தம்97,508
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
வாகனப் பதிவுGJ
மக்களவை (இந்தியா) மக்களவைகச்சு மக்களவைத் தொகுதி
குஜராத் சட்டமன்ற தொகுதிஅப்தாசா[1]
இணையதளம்gujaratindia.com

அப்தாசா தாலுகா (Abdasa taluka) என்பது இந்தியாவின் குசராத்தின் கச்சு மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா (நிர்வாக உட்பிரிவு) ஆகும்.[2] இதன் நிர்வாக மையம் நலியா நகரம் ஆகும். தாலுகா 2,398.26 சதுர கிலோமீட்டர் (926 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[3]

மக்கள் தொகையியல்

[தொகு]

2001-ஆம் ஆண்டில் நடைப்பெற்ற இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அப்தாசா தாலுகாவில் 97,508 மக்கள் வசித்தனர். இவர்களில் 51.0% (49,740) ஆண்கள் மற்றும் 49.0% (47,768) பெண்கள் ஆவர். இது 1991-ஆம் ஆண்டில் நடைப்பெற்ற இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் எண்ணிக்கையிலிருந்து 12.9% அதிகரிப்பைக் குறிக்கிறது. 2001-ஆம் ஆண்டில் பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 960 பெண்கள் என்ற அளவில் இருந்தது. இது 1991-ஆம் ஆண்டின் 1002 என்ற மதிப்பிலிருந்து ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.[3][4] இத்தாலுகா முழுமையாகவே கிராமப்புறங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.[4]

சுற்றுலா மற்றும் முக்கிய இடங்கள்

[தொகு]

'இலாலா–பார்ஜன் சரணாலயம்' என்றும் அழைக்கப்படும் 'கட்ச் பஸ்டார்ட் சரணாலயம்' , இத்தாலுகாவில்தான் அமைந்துள்ளது. இது சுமார் 2 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மட்டுமே கொண்ட , நாட்டின் மிகச்சிறிய சரணாலயமாகத் திகழ்கிறது. இங்கு சுமார் 30 'பெரிய இந்திய பஸ்டார்ட்' பறவைகள் வசிக்கின்றன; இவற்றின் எண்ணிக்கை அடிப்படையில், இராசத்தானில் உள்ள ' பாலைவன தேசியப் பூங்காவிற்கு' அடுத்தபடியாக இச்சரணாலயம் இரண்டாம் இடத்தில் உள்ளது.[5][6][7]

மேலும், அப்தாசா தாலுகா சமணர்களுக்கு ஒரு முக்கியத் தீர்த்த யாத்திரை மையமாகவும் விளங்குகிறது. இத்தாலுகாவில் அமைந்துள்ள சக்காவ், நலியா, தேரா, கோத்ரா மற்றும் சுத்தாரி ஆகிய ஐந்து ஊர்களில், சமணர்களின் புனிதமான மற்றும் புகழ்பெற்ற ஐந்து கோவில்கள் அமைந்துள்ளன.[8] இக்கோவில்களின் தொகுப்பு 'அப்தாசா நி பஞ்சதீர்த்தி' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு 'அப்தாசாவின் ஐந்து தீர்த்தங்கள்' என்று பொருள்.

கிராமங்கள்

[தொகு]

அப்தாசா தாலுகாவில் எண்பத்து ஐந்து ஊராட்சி கிராமங்களும்,[9] 'வரண்டி மோதி' உட்பட மொத்தம் 167 கிராமங்களும் அமைந்துள்ளன.[10]

பொருளாதாரம்

[தொகு]

இங்குப் பயிரிடப்படும் முக்கியப் பயிர்கள் பருத்தி, தினை வகைகள், நிலக்கடலை, சூரியகாந்தி மற்றும் கோதுமை ஆகியவை ஆகும்.[11] 'பென்டோனைட்' கனிமம் இங்கு வணிக ரீதியாகச் சுரங்கத் தொழில் மூலம் வெட்டி எடுக்கப்படுகிறது.[11]

ஆறுகள்

[தொகு]

அப்தாசா தாலுகாவின் நீர் ஆதாரங்களாக மூன்று ஆறுகள் விளங்குகின்றன; அவை: காரி ஆறு, கங்காவதி ஆறு மற்றும் பெராச்சியா ஆறு ஆகியவை ஆகும்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituencies-Post delimitation, State: Gujarat, District: Ahmadabad" (PDF). National Information Centre, Government of India. Archived from the original (PDF) on 2012-12-24.
  2. "Kachchh District Panchayat: Taluka Panchayat". Kutch District. Archived from the original on 15 September 2012.
  3. 1 2 "Districtwise / Talukawise Salient Features of Population Statistics (1991 and 2001): Gujarat" (PDF). Directorate of Economics and Statistics, Government of Gujarat. p. 7. Archived from the original (PDF) on 30 May 2013. Retrieved 31 May 2013.
  4. 1 2 "Census 2001 Population Finder: Gujarat: Kuchchh: Abdasa". Office of The Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. Archived from the original on 2024-07-21. Retrieved 2026-04-15.
  5. Munjpara, S. B.; Jethva, B.; Pandey, C. N. (2011). "Distribution of the Indian Bustard Ardeotis nigriceps (Gruiformes: Otididae) in Gujarat State, India". Journal of Threatened Taxa 3 (9): 2090–2094. doi:10.11609/jott.o2756.2090-4.
  6. Dutta, S.; Rahmani, A. R.; Jhala, Y. V. (2010). "Running out of time? The great Indian bustard Ardeotis nigriceps—status, viability, and conservation strategies". European Journal of Wildlife Research 57 (3): 615. doi:10.1007/s10344-010-0472-z.
  7. "Photographs: Naliya Birds". India Nature Watch.
  8. Kutch by India. Superintendent of Census Operations, Gujarat. Director, Government Print. and Stationery, Gujarat State. 1964. p. 53.
  9. "Reports of National Panchayat Directory: Village Panchayat Names of Abdasa, Kachchh, Gujarat". Ministry of Panchayati Raj, Government of India.{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)
  10. "Villages of Abdasa Taluka". Kutch District. Archived from the original on 7 July 2012.
  11. 1 2 3 "અબડાસા તાલુકા પંચાયત (Abadasa Taluka Panchayat)" (in Gujarati). Kutch District. Archived from the original on 14 October 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்தாசா_தாலுகா&oldid=4563981" இலிருந்து மீள்விக்கப்பட்டது