அப்சல் தௌசீப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்சல் தௌசீப்பு
Afzal Tauseef
தொழில் எழுத்தாளர் , கட்டுர்ரையாளர்
நாட்டுரிமை பாக்கித்தானியர்
கல்வி ஆங்கிலம்
முதுநிலை
கல்வி நிலையம் ஒரியன்டல் கல்லூரி, லாகூர் அரசு கல்லூரி பல்கலைக்கழகம்
கருப்பொருட்கள் அரசியல், சமூகம், மொழி கலைகள்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
செயல் திறன் பெருமை (2010)
மொழி பஞ்சாபி, உருது

அப்சல் தௌசீப்பு (Afzal Tauseef) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளராவார். அப்சல் தௌசிப் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். பஞ்சாபி மொழியில் எழுதும் இவர் கட்டுரையாளராகவும் பத்திரிகையாளராகவும் உள்ளார்

தனது வாழ்நாளில் அப்சல் பாக்கித்தானின் இராணுவ சர்வாதிகாரத்தை விமர்சித்தார். இதற்காக பின்னர் கைதும் செய்யப்பட்டார், பின்னர் அயூப் கான் மற்றும் முகம்மது சியா-உல்-அக் போன்ற ஆட்சியாளர்களால் பல முறை பல இடங்களுக்கு இடம்பெயர்ந்தார். அப்சல் பஞ்சாபி மற்றும் உருது மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் இவரது இலக்கிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் பாக்கித்தான் அரசாங்கத்தால் இவருக்கு பிரைடு ஆஃப் பெர்ஃபாமன்சு என்ற விருது வழங்கப்பட்டது. பாக்கித்தான் மக்கள் கட்சியுடன் அப்சல் தொடர்புடையவர் மற்றும் பஞ்சாப் அதாபி வாரியத்தின் துணைத் தலைவராகவும் அப்சல் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அப்சல் தெகி தெறி துனியா என்ற ஒரு புத்தகத்தையும் எழுதினார் (நான் உங்கள் உலகத்தைப் பார்த்தேன்).

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1936 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியாவின் ஓசியார்ப்பூர் மாவட்டம் கிழக்கு பஞ்சாபின் சிம்பிலி கிராமத்தில் அப்சல் பிறந்தார். இந்தியப் பிரிவினையின்போது இவரது பெற்றோருக்கு ஒரே குழந்தையாக அப்சல் இருந்தார். பின்னர் தன் தந்தையுடன் பாக்கித்தானுக்கு அப்சல் குடிபெயர்ந்தார், நாடு ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் இவர் ஒரு காவல் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் பலுசிசுதானில் தங்கியிருந்தார். குவெட்டாவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் இருந்து மெட்ரிகுலேசன் உட்பட தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் பஞ்சாப் சென்றார், அங்கு ஓரியண்டல் கல்லூரியில் பயின்றார், ஆனால் அறியப்படாத காரணங்களால் பாதியிலேயே கல்லூரியை விட்டு வெளியேறினார். பின்னர் லாகூரில் உள்ள அரசு கல்லூரி பல்கலைக்கழகத்தில் பயின்று ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். உயர் கல்வியை முடித்த பிறகு வீட்டுப் பொருளாதாரப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெறும் வரை கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தார். [1] [2]

இலக்கிய வாழ்க்கை[தொகு]

புத்தகங்கள் மற்றும் தலையங்க பத்திகள் எழுதுவதில் அப்சல் தீவிரமாக ஈடுபட்டார். இவரது வாழ்நாளில் செய்தித்தாள்களுக்கு நிறைய எழுதினார். அரசியல், சமூக பிரச்சினைகள் மற்றும் கலை மற்றும் மொழிகள் போன்ற பல்வேறு கருப்பொருள்களுடன் முப்பது புத்தகங்களை வெளியிட்டார். [3]

இவருடைய முக்கிய புத்தகங்கள் பின்வருமாறு:

 • பஞ்சாப் கேடா நா பஞ்சாப் (பஞ்சாப் என்றால் என்ன) [2]
 • தக்லி மேரே பக்ரே (என் குழந்தைகள், ஓ சீசம் மரம்)
 • பஞ்சீவன் காந்தா (25 ஆவது மணிநேரம்) [2]
 • வைலே டி பிச்சை பிச்சை (கடந்த காலத்தை தொடர்ந்து)
 • அம்மன் வைலே மில்லன் கே (சமாதான காலத்தில் சந்திப்போம்) [2]

இவரது சில புத்தகங்கள் பின்னர் குர்முகி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவில் வெளியிடப்பட்டன. வங்காளதேசத்தின் வீழ்ச்சி மற்றும் பலூச் காரணத்தைப் பற்றியும் இவர் ஒரு புத்தகம் எழுதினார். இதற்காக இராணுவ சோதனைகள் மற்றும் தடுப்புக்காவல்களை எதிர்கொண்டார். [2] என் பிரியமான மரங்கள், என் குழந்தைகள் என்பவை பிரிவினை பற்றி இவர் எழுதிய புத்தகங்களாகும். [4] அப்சலின் முக்கியப் எழுது பொருள் முற்போக்கான எழுத்தாகும். [5]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

இவரது வாழ்நாளில், அப்சல் தௌசீப்பு தனது இலக்கியப் பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றார்:

மரணம்[தொகு]

இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அல்சாஃபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள், டிசம்பர் 30, 2014 அன்று, அவர் பாக்கித்தானின் லாகூரில் இறந்தார். இக்பால் நகரத்தின் கரீம் தொகுதி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது இறுதிச் சடங்கில் பஞ்சாப் அதாபி வாரிய உறுப்பினர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் உட்பட முக்கிய நபர்கள் பலர் கலந்து கொண்டனர். [1]

இந்தியாவின் சக முற்போக்கு எழுத்தாளரான அமிர்தா பிரீதம் இந்தி மொழியில் தூசுரே ஆதாம் கி பேட்டி என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைத் தொகுத்தார். மேலும் அப்சல் எதிர்கொண்ட போர்களுக்காக "சுச்சி டீ பஞ்சாப் தி" (பஞ்சாப்பின் உண்மையான மகள்) என்றும் இவரை அழைத்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Luminary Afzal Tauseef is no more". http://www.dawn.com/news/1154214. Ahmed, Shoaib (31 December 2014). "Luminary Afzal Tauseef is no more". Dawn (newspaper). Retrieved 28 April 2020.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "True daughter of the Punjab (profile of Afzal Tauseef)". https://www.thenews.com.pk/tns/detail/557822-afzal-tauseef-true-daughter-of-punjab. Mahmood Awan (11 January 2015). "True daughter of the Punjab (profile of Afzal Tauseef)". The News International (newspaper). Retrieved 28 April 2020.
 3. "Literate, NOS, The News International". jang.com.pk. 2012-10-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-09-11 அன்று பார்க்கப்பட்டது.
 4. Legacies of the Homeland: 100 Must Read Books by Punjabi Authors. https://books.google.com/books?id=lbZUDwAAQBAJ&q=afzal+tauseef+writer&pg=PT322. 
 5. "Bhagat Singh: Martyr of Lahore | India News - Times of India". The Times of India.
 6. "The Tribune, Chandigarh, India - Jalandhar". www.tribuneindia.com.
 7. "Interview: Afzal Tauseef". Newsline. November 2009. https://newslinemagazine.com/magazine/interview-afzal-tauseef/. பார்த்த நாள்: 27 April 2020. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சல்_தௌசீப்பு&oldid=3541039" இருந்து மீள்விக்கப்பட்டது