அபோர் மலை அகாமா
அபோர் மலை அகாமா | |
---|---|
' | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஜபாலுரா கிரே, 1853
|
இனம்: | ஜ. ஆசுடெனியானா
|
இருசொற் பெயரீடு | |
ஜபாலுரா ஆசுடெனியானா (அன்னண்டேல், 1908) | |
வேறு பெயர்கள் | |
|
ஜபலுரா ஆசுடெனியானா (Japalura austeniana), பொதுவாக அபோர் மலை அகாமா[1] அல்லது அன்னாண்டேல் டிராகன்[2] என்றும் அழைக்கப்படுகிறது. இது அகாமிடே குடும்பத்தில் உள்ள ஓர் அரிய பல்லி இனமாகும். இந்தச் சிற்றினம் ஆசியாவில் காணப்படுகிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]இங்கிலாந்தினைச் சார்ந்த நிலத்தியலாளர் அறிஞர் என்றி கேவர்சம் கோட்வின்-ஆசுடன் நினைவாக இதற்கு ஆசுடெனியானா என்ற சிற்றினப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2]
புவியியல் வரம்பு
[தொகு]ஜ. ஆசுடெனியானா பூட்டான் மற்றும் இந்தியா (அசாம், அருணாச்சலப் பிரதேசம்) காணப்படுகிறது.[1]
வட்டாரம் வகை: "கர்மத்தி அருகே உள்ள மலைகள், அசாம்" (= தாப்ளா மலை, அசாம்).[3][1]
மறுகண்டுபிடிப்பு
[தொகு]அபோர் மலை அகாமா, ஜா. ஆசுடெனியானா, முன்பு இதன் ஒற்றை மாதிரியிலிருந்து மட்டுமே அறியப்பட்டது. ஆனால் 2006ஆம் ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கழுக்கூடி வனவிலங்கு சரணாலயத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.[4]
விளக்கம்
[தொகு]ஜ. ஆசுடெனியானா மாதிரியின் மூக்கிலிருந்து குதம் வரை உள்ள நீளம் 9 செ.மீ. ஆகும். இதன் வால் 23 cm (9.1 அங்) செ.மீ. நீளமானது.[3]
இனப்பெருக்கம்
[தொகு]ஜ. ஆசுடெனியானா முட்டையிட்டு இனப்பெருக்க செய்யக்கூடியது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 சிற்றினம் Japalura austeniana at The Reptile Database www.reptile-database.org.
- ↑ 2.0 2.1 Richard Allen "Bo" Crombet-Beolens, Michael Watkins, Michael Grayson. (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Mictopholis austeniana, p. 13).
- ↑ 3.0 3.1 Nelson Annandale. (1908). "Description of a new Species of Lizard of the Genus Salea from Assam". Records of the Indian Museum 2: 37-38. (Salea austeniana, new species).
- ↑ Ramana Athreya (2006). Eaglenest Biodiversity Project − I (2003–2006): Conservation Resources for Eaglenest Wildlife Sanctuary. A report submitted to the Forest Department of the Government of Arunachal Pradesh, India, and the Rufford-Maurice-Laing Foundation (UK). Pune, India: Kaati Trust. p. 54. பரணிடப்பட்டது 2010-06-02 at the வந்தவழி இயந்திரம்
மேலும் வாசிக்க
[தொகு]- தாஸ் ஏ, தாஸ் I (2007). "மிக்டோபோலிஸ் ஆஸ்டெனியானா மறு கண்டுபிடிப்பு (அன்னாண்டேல், 1908) (ஸ்குவாமாட்டாஃ அகாமிடே) ". நடப்பு ஹெர்படாலஜி 26 (1) 45-47.
- ஸ்மித் எம். ஏ. (1935). இலங்கை மற்றும் பர்மா உட்பட பிரிட்டிஷ் இந்தியாவின் விலங்கினங்கள். ஊர்வன மற்றும் நீர்நிலவாழ் உயிரினங்கள். தொகுதி. II. - சூர்யா. லண்டன்ஃ கவுன்சிலில் உள்ள இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர். (டெய்லர் மற்றும் பிரான்சிஸ், பிரிண்டர்ஸ். xiii + 440 pp. + தட்டு I + 2 வரைபடங்கள். (மிக்டோபோலிஸ், புதிய பேரினம், பக்கம் 149 மிக்டோபோலிஸ ஆஸ்டெனியானா, புதிய கலவை, பக்கம் 165, படம் 50.