அபோகர் வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபோகர் வனவிலங்கு சரணாலயம் (Abohar Wildlife Sanctuary) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாசில்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தனியார் இயற்கை காப்பகமான இது 1975 ஆம் ஆண்டில் ஒரு சரணாலயம் என்ற தகுதியைப் பெற்றது. மீண்டும் 2000 ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 இன் கீழ் ஒரு சரணாலயத்தின் தகுதியைப் பெற்றது. புல்வாய் இன மான்களை பாதுகாக்கும் புகலிடமாக அறியப்படுகிறது. இப்பகுதியை பூர்விகமாகக் கொண்ட பிசுனோய் மக்கள் புல்வாய் இன மான்களை புனித விலங்காக கருதுகிறார்கள்.[1]

அமைவிடம்[தொகு]

அபோகர் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாசில்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் பிசுனோய் சமூக மக்கள் வசிக்கும் 13 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. 18,650 எக்டேர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இது புல்வாய் மான்களைப் பாதுகாக்கும் நோக்கில் வேலை செய்யும் பிசுனோய் மக்களின் 13 விவசாய நிலங்களையும் கொண்டுள்ளது.[2]

சுற்றுலா[தொகு]

அபோகர் வனவிலங்கு சரணாலயம் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பல்வேறு வகைகளுக்கு தாயகமாக உள்ளது. புல்வாய் மான்களுக்கும் நீலான் மான்களுக்கும் இச்சரணாலாயம் மிகவும் பிரபலமானது. முயல், குள்ளநரி, காட்டுப்பன்றி, வாகை மரம், கருவேல மரம், வேம்பு மரம் போன்ற பிற விலங்குகளும் தாவரங்களும் இங்கு நிறைந்துள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]