அபு ருசுத்து
அபு ருசுத்து Abu Rushd | |
|---|---|
| আবু রুশদ | |
| தாய்மொழியில் பெயர் | আবু রুশদ |
| பிறப்பு | சையது அபு ருசுத்து மதினுதீன் 25 திசம்பர் 1919 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
| இறப்பு | 23 பெப்ரவரி 2010 (அகவை 90) |
| படித்த கல்வி நிறுவனங்கள் | எக்சுடர் கல்லூரி, ஆக்சுபோர்டு |
| உறவினர்கள் | இரசீத் கரீம்ம் (சகோதரர்) |
| விருதுகள் | full list |
சையது அபு ருசுத்து மதினுதீன் (Syed Abu Rushd Matinuddin) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். அபு ருசுத்து என்ற புனைப்பெயரால் அறியப்பட்டார். 1919 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று பிறந்தார்.[1][2][3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]ஊக்ளி மொக்சின் கல்லூரி ஆங்கில விரிவுரையாளராக அபு ருசுத்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆக்சுபோர்டில் உள்ள எக்சிடெர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிப்பதற்காக 1951 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்றார்.[4] பின்னர் கொல்கத்தா இசுலாமியா கல்லூரி, டாக்கா கல்லூரி, சிட்டகாங் கல்லூரி, ராச்சாகி கல்லூரி மற்றும் சகாங்கீர்நகர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆங்கிலம் கற்பித்தார்.[5][2] 1982 ஆம் ஆண்டில் சகாங்கீர்நகர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.[6]
படைப்புகள்.
[தொகு]அபு ருசுத்தின் முதல் வெளியீடு, 1939-ஆம் ஆண்டில் வெளியான ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். ஆறு நாவல்களைத் தவிர, இவர் 50 சிறுகதைகளையும், மூன்று தொகுதிகளைக் கொண்ட ஒரு சுயசரிதையையும் எழுதியுள்ளார். மேலும், சேக்சுபியரின் கவிதைகள் உட்பட, இலக்கியப் படைப்புகளை வங்காள மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து வங்காளத்திற்கும் மொழிபெயர்ப்பதில் வல்லமை பெற்றிருந்தார்.
அபு ருசுத்து 1964 ஆம் ஆண்டில் லாலோனின் சில கவிதைகளையும் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.[7]
நாவல்கள்.
[தொகு]- எலோமெலோ (இதுவும் அதுவும், 1946)
- சம்னே நோடன் தின் (ஒரு புதிய நாள், 1951)
- தோபா கோலோ திகி (பூல் ஏரி ஆகிறது, 1960)
- நோங்கோர் (அஞ்சோர், 1967)
- ஒனிசிட்டோ ராகினி (தி அன்சூர் டியூன், 1969)
- சுதாகிதா துவிப்பு (கைவிடப்பட்ட தீவு, 1974) [2]
விருதுகள்
[தொகு]
- தம்கா-இ-இம்தியாசு (1963)
- வங்காள அகாடமி இலக்கிய விருது (1963) [8]
- அபீப் வங்கி விருது (1970)
- ஏகூசே பதக் (1981)
- ஆதாம்சி இலக்கிய விருது[2]
- நசீருதீன் தங்கப் பதக்கம் (1992)
- அலக்தா இலக்கிய விருது (1992)
- வங்காள சாகித்ய பரிசத் விருது (1993)
- சேர்-இ-பங்களா தங்க விருது (1992) [2]
- லெகிகா சங்கா விருது (1992)
- ரோட்டரி கிளப் விருது (1995)
- சட்டாகிராம் சங்சுகிரிதி கேந்த்ரோ ஃபரூக் நினைவு விருது (1999) [9]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அபு ருசுத்து அச்சிசா ருசுத்தை மணந்தார்.[6] இவரது சகோதரர் ரசீத் கரீம் ஒரு நாவலாசிரியர்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Syed Abu Rushd Matinuddin: The litterateur and the man" (in en). The New Nation. http://thedailynewnation.com/news/86435/syed-abu-rushd-matinuddin-the-litterateur-and-the-man.html.
- 1 2 3 4 5 "Prof Abu Rushd passes away" (in en). The Daily Star. http://www.thedailystar.net/news-detail-127819.
- ↑ "Remembering our wordsmiths" (in en). The Daily Star. http://www.thedailystar.net/remembering-our-wordsmiths-9376.
- ↑ "Dr A R Mallick: A Personal Tribute" (in en). The Daily Star. 1998-02-04. http://www.thedailystar.net/news/dr-a-r-mallick-a-personal-tribute.
- ↑ "The life of a scholar" (in en). The Daily Star. 2013-07-20. http://www.thedailystar.net/news/the-life-of-a-scholar.
- 1 2 "JU English deptt launches Prof Abu Rushd scholarship" (in en). The Daily Star. 2011-08-09. http://www.thedailystar.net/news-detail-197830.
- ↑ "The long tradition of Bengal mysticism" (in en). The Daily Star. 2009-03-14. http://www.thedailystar.net/news-detail-79564.
- ↑ পুরস্কারপ্রাপ্তদের তালিকা [Winners list] (in Bengali). Bangla Academy. Retrieved 23 August 2017.
- ↑ "CSK - Farrukh Memorial Award". Archived from the original on 2011-07-25. Retrieved 2017-12-17.
- ↑ "Silent but Near" (in en). The Daily Star. http://www.thedailystar.net/literature/silent-near-1447282.
- ↑ "Rashid Karim: voice of modern fiction" (in en). The Daily Star. http://www.thedailystar.net/news-detail-212634.