அபு. சாலிஹ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அபு. சாலிஹ் (பிறப்பு: ஆகத்து 17 1934) இந்தியா, தமிழ்நாடு, புதுவை மாநிலத்தில் அம்பகரத்தூர் எனுமிடத்தில் பிறந்த இவர் எகோல் சாந்திரால் தொடக்கப் பள்ளியிலும், திருநல்லார் உயர்நிலைப் பள்ளியிலும் தனது கல்வியைக் கற்றார். அஞ்சல் வழிக் கல்வி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், சென்னை புதுக்கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். இவர் தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளை நன்கறிந்தவரும், நகை விற்பனையாளருமாவார்.

வகித்த பதவிகள்[தொகு]

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகம் மற்றும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆகியவற்றின் உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.

இலக்கியப் பணி[தொகு]

தீன்தாசன், அன்புதாசன், சாந்திச் செல்வன், ஹலிமா மணாளன் போன்ற புனைப்பெயர்களில் 1965ல் எழுதத் தொடங்கிய இவர் மரபுக் கவிதை, புதுக் கவிதை, சிறுகதை, கட்டுரை முதலிய துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்றார். 1965ம் ஆண்டில் மலாயா நண்பன் எனும் இதழ் இவரது முதல் படைப்பாகிய ‘யார் குற்றவாளி'? எனும் ஆக்கத்தைப் பிரசுரித்தது. இதனைத்தொடர்ந்து இவரின் ஆக்கங்கள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • 1996ல் ராணி வார இதழில் இவர் எழுதிய கவிதைக்கான பரிசு

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு._சாலிஹ்&oldid=2713062" இருந்து மீள்விக்கப்பட்டது