உள்ளடக்கத்துக்குச் செல்

அபுவின் மகன் அமென்கோதேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹபுவின் மகன் அமென்கோதேப்
அபுவின் மகன் அமென்கோதேப்பின் சிற்பம், கர்னாக் கோயில்
பிறப்புசுமார் கிமு 1425
அத்ரிபிஸ், கீழ் எகிப்து
இறப்புசுமார் கிமு 1356 (வயது. 69)
தீபை,? எகிப்து
பணிபல்கலை வித்தகர்

ஹபுவின் மகன் அமென்கோதேப் (Amenhotep, son of Hapu), பண்டைய எகிப்தின் கீழ் எகிப்து பிரதேசத்தில் உள்ள அத்ரிபிஸ் நகரத்தில் கிமு 1425ஆம் ஆண்டில் அமென்கோதேப் என்பவருக்கு பிறந்தவர் ஹபு. பல்கலை வித்தகரான ஹபு பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் அரசவையில் அரசு அலுவலர், கட்டிடக் கலைஞர், கோயில் பூஜாரி மற்றும் எழுத்தராக பணிபுரிந்தார். ஹபு இறந்த பிறகு நோய்களை குணப்படுத்தும் கடவுளாக அறிவிக்கப்பட்டார்.

மரபுரிமைப் பேறுகள்

[தொகு]

ஹபுவின் மகன் அமென்கோதேப்பின் இறப்பிற்குப் பின்னர் அவரது போதனைகளுக்காக தத்துவ ஞானியாக கொண்டாடப்பட்டார். மேலும் நோய்களை குணப்படுத்தும் கடவுளாகவும் கொண்டாடப்பட்டார்.[1]). கர்னாக் கோயிலில் ஹபுவின் மகன் அமென்கோதேப் எழுதும் நிலையில் சிற்பங்கள் நிறுவப்பட்டது. மன்னர் மூன்றாம் அமென்கோதேப்பின் நினைவுக் கோயில் அருகே ஹபுவின் நினைவுக் கோயில் கட்டப்பட்டது.

நினைவுக் கோயில்

[தொகு]

மன்னர்களின் சமவெளியில் பார்வோன் மூன்றாம் அமென்கோதேப்பிற்கான நினைவுக் கோயில் அருகே ஹபுவின் மகன் அமென்கோதேப் தனக்கான நினைவுக்கோயிலை கட்டிக்கொள்ள அனுமதி பெற்றார். ஹபுவின் மகன் அமென்கோதேப்பின் நினைவுக்கோயில் 1934 அல்லது 1935ஆம் ஆண்டில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Albrecht, Felix; Feldmeier, Reinhard, eds. (February 6, 2014). The Divine Father: Religious and Philosophical Concepts of Divine Parenthood in Antiquity. Themes in Biblical Narrative: Jewish and Christian Traditions (E-book ed.). Leiden; Boston: Brill. p. 29. ISBN 978-90-04-26477-9. ISSN 1388-3909. Retrieved May 30, 2020.

மேலும் படிக்க

[தொகு]
  • J. H. Breasted, Ancient Records of Egypt, Part Two, 1906
  • Warren R. Dawson, Bridle of Pegasus, 1930, pp. 55ff.
  • Miriam Lichtheim, Ancient Egyptian Literature: A Book of Readings: The Late Period, 1980, University of California Press, Page 104
  • Siegfried Morenz, Egyptian Religion, 1992 Cornell University Press
  • Margaret Alice Murray, 1931, Egyptian Temples, 2002 Courier Dover Publications
  • Boyo Ockinga, Amenophis, Son of Hapu: A Biographical Sketch, The Rundle Foundation for Egyptian Archaeology Newsletter No. 18, February 1986

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amenhotep, son of Hapu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.