உள்ளடக்கத்துக்குச் செல்

அபுர் சன்ஸார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுர் சன்ஸார்
இயக்கம்சத்யஜித் ராய்
கதைசத்யஜித் ராய், நாவலின் தழுவல்விபுதிபூஷன் பந்தியோபதெயே
நடிப்புசௌமித்ரா சாட்டர்ஜி,
ஷர்மிலா தாகூர்,
அலோக் சக்ரவர்த்தி,
ஸ்வபன் முகெர்ஜி
விநியோகம்எட்வார்ட் ஹரிசன்
வெளியீடு1959
ஓட்டம்117 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி
முன்னர்அபராஜிதோ

அபுர் சன்ஸார் (வங்காளமொழி: অপুর সংসার Opur Shôngshar, ஆங்கிலம்|The World of Apu)அப்புவின் இளம் பருவத்தினையும் அவன் வாழ்க்கையின் முடிவுகளினையும் காட்டும் இத்திரைப்படம் அப்பு திரைப்படத்தின் மூன்றாம் பாகமென்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு 1959 ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

வகை

[தொகு]

கலைப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

அப்பு வேலை தேடி கொல்கத்தாவிற்குப் பயணமாகின்றான்.கொல்கத்தாவில் வாடகை வீட்டில் குடிக்கொண்டிருக்கும் அப்பு தன்னைப் பற்றிய கதையொன்றினை ஆவலாக எழுதியும் கொண்டிருக்கின்றான்.கதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிய அப்பு தன்னுடைய கதையும் பதிப்பாகும் என்பதில் முனைப்போடு இருக்கின்றான்.அங்கு தங்கியிருக்கும் வேளையில் அவனுடைய பழைய நண்பனான புழுவைச் சந்திக்கின்றான் பின்னர் இருவருமாக புலுழின் சொந்தக் கிராமத்தில் நடைபெற இருக்கும் சொந்தக்காரப் பெண்ணின் திருமணத்திற்குச் செல்கின்றனர்.மேலும் அப்பெண்ணை மணம் செய்யவிருந்த இளைஞனும் மனநோயாளி என்பதனை அறிந்து கொள்ளும் அவளின் பெற்றோரும் திருமணம் நடைபெற வேண்டிய நேரத்தில் நடைபெற்றே தீரவேண்டுமென்று கூறிகின்றனர்.அதன்படி பல வற்புறுத்தல்களின் பின்னர் அப்புவே அவளை மணம் செய்துகொள்கின்றான்.அபர்னாவுடன் கொல்கத்தாவிற்குச் செல்லும் அப்பு அங்கு அவளுடன் வாழ்ந்தும் வருகின்றான்.கஜால் என்னும் மகனைப் பெற்றெடுக்கும் அபர்னா பிரசவத்தின் பின்னர் இறந்தும் போகின்றாள்.இச்செய்தியை மனதால் தாங்கமுடியாத அப்பு அக்குழந்தையினை பாட்டானார்களிடம் விடுத்து காடு மேடு என அலைந்து ஆன்மீகவாதியாகவே மாற்றம் கொள்கின்றான்.பின்னர் சிறிது காலம் கழித்து தன் மகனைப் பார்க்க பிரியப்பட்டு அவனிடம் சென்றடைகின்றான்.ஆரம்பத்தில் அவனிடம் வரமறுக்கும் கஜால் பின்னர் தன் தந்தையிடம் ஓடிச் சென்று கட்டித் தழுவுகின்றான்.

விருதுகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுர்_சன்ஸார்&oldid=3954397" இலிருந்து மீள்விக்கப்பட்டது