அபீபா சராபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபீபா சராபி
حبیبه سرابی
Habiba Sarabi in April 2011.jpg
ஏப்ரல் 2011இல் அபீபா சராபி
பாமியன் மாகாணத்தின் ஆளுநர்
பதவியில்
23 மார்ச் 2005 – 14 அக்டோபர் 2013
முன்னவர் முகமது ரகீம் அலியார்
பின்வந்தவர் குலாம் அலி வதாத்
2வது மகளிர் விவகார அமைச்சர்
பதவியில்
சூலை 2002 – திசம்பர் 2004
முன்னவர் சிமா சமர்
பின்வந்தவர் மசூத் ஜலால்
தனிநபர் தகவல்
பிறப்பு அபீபா
1956 (அகவை 64–65)
சராப், சகாத்து மாவட்டம், கசுனி மாகாணம், ஆப்கானித்தான்
தேசியம்  ஆப்கானித்தான்
அரசியல் கட்சி ஆப்கனின் உண்மை மற்றும் நீதிக் கட்சி
பிள்ளைகள் 3
இனக் குழு கசாரா

மருத்துவர் அபீபா சராபி (Habiba Sarābi) (பிறப்பு 1956) ஆப்கானித்தானின் இரத்தவியல் நிபுணரும், அரசியல்வாதியும், தலிபானுக்கு பிந்தைய புனரமைப்பின் சீர்திருத்தவாதியும் ஆவார். 2005ஆம் ஆண்டில், ஆப்கான் குடியரசுத் தலைவர் அமீத் கர்சாய் அவர்களால் பாமியன் மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு ஆப்கானித்தானின் எந்த மாகாணத்திற்கும் ஆளுநராகும் முதல் ஆப்கானிய பெண்ணாக ஆனார். இவர் முன்பு ஆப்கானித்தானின் மகளிர் விவகார அமைச்சராகவும், கலாச்சாரம் மற்றும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார். பெண்களின் உரிமைகள், பிரதிநிதித்துவம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஊக்குவிப்பதில் சாரபி முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் ஆப்கானித்தானின் கசாரா இனத்தைச் சேர்ந்தவர். இவரது கடைசி பெயர் சில நேரங்களில் சரோபி என்றும் உச்சரிக்கப்படுகிறது.

சுயசரிதை[தொகு]

சராபி கசுனி மாகாணத்தில்[1] உள்ள சராப் என்ற பகுதியில் பிறந்தார். தனது இளம் வயதில் தந்தையுடன் நாடு முழுவதும் பயணம் செய்தார். பின்னர் இவர் உயர்நிலைப் பள்ளியிலும், பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கவும் காபூலுக்குச் சென்றார். 1987இல் பட்டம் பெற்ற பிறகு, உலக சுகாதார அமைப்பால் இவருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது பின்னர், இரத்தவியல் படிப்பை முடிக்க இந்தியா வந்தார்.

ஆப்கானித்தானில் தலிபான் ஆட்சியின் போது, மருத்துவர் சராபியும் இவரது குழந்தைகளும் பாக்கித்தானின் பெசாவருக்கு தப்பிச் நாடு திரும்பினர். இவரது கணவர் இவரது குடும்பத்தை கவனிப்பதற்காக காபூலில் இருந்தார். ஆப்கானிஸ்தானிலும், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாம்களிலும் சிறுமிகளுக்கு ஆசிரியையாக இரகசியமாக பணியாற்றினார். 1998இல், இவர் ஆப்கானியக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். இறுதியில் அந்த அமைப்பின் பொது மேலாளரானார். இவர் ஆப்கானித்தானின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மனிதாபிமான உதவி அமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

2020ஆம் ஆண்டில், ஆப்கானித்தானின் இசுலாமிய குடியரசின் அமைதி பேச்சுவார்த்தைக் குழுவில் அபீபா சராபி உறுப்பினராக இருந்தார்.[2]

ஆளுநர்[தொகு]

பாமியன் மாகாணத்தின் ஆளுநராக, வருவாய்க்கு ஆதாரமாக இருப்பதால் தனது கவனம் சுற்றுலாவின் மீது இருக்கும் என சராபி அறிவித்துள்ளார். இந்த மாகாணம் வரலாற்று ரீதியாக பௌத்த கலாச்சாரத்தின் ஆதாரமாக இருந்தது. மேலும், ஆப்கானித்தானின் மீது அமெரிக்க படையெடுப்புக்கு முன்னர் தலிபான்களால் அழிக்கப்பட்ட இரண்டு பழங்கால பாமியன் புத்தர் சிலைகளின் இருப்பிடமாக இருந்தது. இருப்பினும், ஆப்கானித்தானின் ஏழ்மையான மற்றும் மிகவும் வளர்ச்சியடையாத மாகாணங்களில் ஒன்றாக பாமியன் உள்ளது. கல்வியறிவின்மை, வறுமையின் உயர் விகிதங்கள் உட்பட பல சிக்கல்களை எதிகொண்டுள்ளது.

பணிகள்[தொகு]

பாமியனில் ஆப்கானித்தானின் பந்த்-இ அமீர் தேசிய பூங்காவை நிறுவுவதில் இவரது பணிக்காக 2008 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகை அதன் சுற்றுச்சூழல் நாயகர்களின் பட்டியலில் (2008) இவரைச் சேர்த்தது.[3] 2013இல், இவர் ரமோன் மக்சேசே விருதை வென்றார்.

விருதுகள்[தொகு]

ஆப்கானித்தானில் அமைதியைக் கொண்டுவர அயராது உழைத்ததற்காகவும், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தியதற்காகவும் 2016இல் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் N- அமைதி விருதையும் பெற்றார்.

மார்ச் 8, 2018 அன்று, அனைத்துலக பெண்கள் நாளன்று, ஆப்கானித்தானில் ஐக்கிய நாடுகள் அவைத் திட்டம் பற்றிய திறந்த விவாதத்தின் போது, இவர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றத்தில் ஒரு அறிக்கையை வழங்கினார் [4] .

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபீபா_சராபி&oldid=3278161" இருந்து மீள்விக்கப்பட்டது