அபி (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபி
பிறப்பு1942
போடிநாயக்கனூர், தேனி தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிபேராசிரியர், கவிஞர்
பணியகம்மேலூர் அரசுக் கலைக் கல்லூரி
சமயம்இசுலாம்
பிள்ளைகள்அஷ்ரப் அலி,
ரியாஸ் அகமது,
பர்வின் பாத்திமா[1]
வலைத்தளம்
http://abikavithaiulagam.blogspot.com

அபி என்ற பீ. மு. அபிபுல்லா (பிறப்பு: 1942) என்பவர் தமிழ்க் கவிஞர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார்.[2] தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார்.[3] இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.[1]

வாழ்க்கை[தொகு]

இவர் 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் பிறந்தார். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.[4] மேலூர் அரசுக் கலைக்கல்லூரில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இவரது நூல்கள்[தொகு]

  1. மெளனத்தின் நாவுகள் (1974) - கவிஞர் மீரா அவர்களால் அன்னம் பதிப்பகம்[5]
  2. அந்தர நடை (1978)
  3. என்ற ஒன்று (1987)
  4. அபி கவிதைகள் (2013) - கலைஞன் பதிப்பகம்

விருதுகள்[தொகு]

  • 2004: கவிக்கோ விருது
  • 2004: கவிக்கணம் விருது
  • 2008: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது[1]
  • 2011: சிற்பி இலக்கிய விருது[6]
  • 2019: விஷ்ணுபுரம் விருது[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபி_(கவிஞர்)&oldid=2796264" இருந்து மீள்விக்கப்பட்டது