உள்ளடக்கத்துக்குச் செல்

அபிராமி சுரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிராமி சுரேஷ்
பிறப்பு9 அக்டோபர் 1995 (1995-10-09) (அகவை 29)
கொச்சி, கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்எப்பி
பணி
செயற்பாட்டுக்
காலம்
2008 – தற்போது வரை
உறவினர்கள்அம்ருதா சுரேஷ் (சகோதரி)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)
வெளியீட்டு நிறுவனங்கள்சுயாதீனக் கலைஞர்
இணைந்த செயற்பாடுகள்அம்ருதம் கமாய்
வலைத்தளம்
amrutamgamay.com

அபிராமி சுரேஷ் (Abhirami Suresh) (பிறப்பு 9 அக்டோபர் 1995) இந்தியாவைச் சேர்ந்த ஓர் நடிகையும், பாடகியும், இசைக்கலைஞரும், இசையமைப்பாளரும், நிகழ்படத் தொகுப்பாளரும் ஆவார். இவர் தனது நடிப்புத் தொழிலை தான் குழந்தையாக (12 வயதில்) இருக்கும்போது ஹலோ குட்டிச்சாத்தான் என்ற மலையாளத்ட் தொலைக்காட்சித் தொடரின் மூலம் ஏசியாநெட்டில் தொடங்கினார்.மேலும் இவரது முதல் இசை இவரது 14 வயதில் வெளியிடப்பட்டது. பிவேர் ஆப் டாக்ஸ் (நாய்கள் ஜாக்கிரதை) (2014) என்ற ஒரு படத்தில் மீரா என்ற பெண் கதாபாத்திரத்தில் முதலில் நடித்தார். கப்பா தொலைக்காட்சியில் டியர் கப்பா என்ற இசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார். அபிராமியும் இவரது சகோதரி அமிர்தா சுரேஷும் தங்களின் சொந்த இசை இசைக்குழுவான அம்ருதம் கமயாவின் முன்னணி பாடகர்கள்.[1] இவர்கள் தங்கள் யூடியூப் அலைவரிசையான அம்ருதம் காமய் - ஏஜி -யில் ஏஜி வலைப்பூ தொடர் மூலம் காணொலிப் பதிவு செய்வதற்கும் பெயர் பெற்றவர்கள்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

அபிராமி, இசைக்கலைஞர் பி. ஆர். சுரேஷ் - லைலா ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை சுரேஷ் ஒரு இந்து, தாய் லைலா ஒரு கிறிஸ்தவர் ஆவார். இவருக்கு ஐந்து வயது மூத்தவரான அம்ருதா சுரேஷ் என்ற ஒரு சகோதரி இருக்கிறார். அம்ருதாவும் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். இவர்கள் கொச்சியின் இடப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் (தந்தைவழி) வாழ்வது சிறு வயதிலிருந்தே இசையைத் தொடர ஊக்கமளித்தது. இவர் தனது பள்ளிகளில் பலகுரலில் பேசுவது, தனி நடிப்பு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும், ஒரு நேர்காணலில், அபிராமி தான் எப்போதும் ஒரு நடிகையாக இருக்க விரும்புவதாகவும், தான் ஒரு இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் இருந்து வந்தாலும், அவர் தன்னை ஒரு பாடகியாக பார்க்கவில்லை அல்லது அம்ருதம் கமய் உருவாகும் வரை இசையைத் தொடர நினைத்ததில்லை என்றும் கூறினார். பதினொன்றாம் வகுப்பு முடித்த பிறகு, நடிப்பில் சான்றிதழ் பட்டம் பெற்றார். இவர் தனது இளங்கலை படிப்பின் ஒரு பகுதியாக ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.[2] இவர் ஆமின்டோ என்ற நகைகளின் விற்பனையை மேற்கொண்டு வருகிறார்.[3] அபிராமி வடிவழககியாகவும் இருக்கிறார்.[4] இவர் கேரளா பேஷன் ரன்வே 2018 இல் மேடையில் நடந்து சென்றார். வனிதா என்ற இதழின் அட்டைப் பக்கத்திலும் இவள் தன் சகோதரியுடன் இடம்பெற்றிருந்தார்.

தொழில்

[தொகு]

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி

[தொகு]

அபிராமி தனது சகோதரி அம்ருதா சுரேஷ் பங்குபெற்ற ஏசியநெட்டின் இசை உண்மைநிலை நிகழ்ச்சியான ஐடியா ஸ்டார் சிங்கர் (2007) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரஞ்சினி ஹரிதாஸ், நடுவர் சரத் ஆகியோரின் அபிப்ராயங்களுக்குப் பிறகு தனது முதல் நிகழ்ச்சியின் வாய்ப்பைப் பெற்றார். இதன் காரணமாக, ஏசியநெட்டில் ஒளிப்பரப்பானஹலோ குட்டிச்சாத்தான் (2008 - 2009) என்ற குழந்தைகள் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[5] அதில் இவர் தனது 12 வயதில் நிம்மி வேடத்தில் நடித்தார்.[6] இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.[7] அதைத் தொடர்ந்து கேரளோத்சவம் 2009, குலுமால்: த எஸ்கேப் (இரண்டுமே 2009) போன்ற படங்களில் நடித்தார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "These young female musicians are winning ears and hearts with their music". The Hindu.
  2. M., Athira (12 November 2015). "Essaying multiple roles". தி இந்து. https://www.thehindu.com/features/friday-review/interview-with-actor-anchor-singer-abhirami-suresh/article7868829.ece. பார்த்த நாள்: 25 February 2020. 
  3. Web team (23 February 2020). "ഇതാണ് അഭിരാമി സുരേഷ്; ബിഗ് ബോസിലെ പുതിയ മത്സരാര്‍ഥിയെ അറിയാം". Asianet News. https://www.asianetnews.com/biggboss/all-you-want-to-know-about-abhirami-suresh-new-contestant-in-bigg-boss-2-q6639e. பார்த்த நாள்: 26 February 2020. 
  4. Entertainment desk (15 February 2020). "പാട്ടിനൊപ്പം മോഡലിങ്ങിലും തിളങ്ങി അഭിരാമി സുരേഷ്; ചിത്രങ്ങൾ". இந்தியன் எக்சுபிரசு. https://malayalam.indianexpress.com/entertainment/abhirami-suresh-glamorous-photos-343990/. பார்த்த நாள்: 27 February 2020. 
  5. M., Athira (12 November 2015). "Essaying multiple roles". தி இந்து. https://www.thehindu.com/features/friday-review/interview-with-actor-anchor-singer-abhirami-suresh/article7868829.ece. பார்த்த நாள்: 25 February 2020. 
  6. Nair, Radhika (22 August 2019). "Throwback Thursday: Imitating music composer Sharath got me Hello Kutttichathan, says actress Abhirami Suresh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/throwback-thursday-imitating-music-composer-sharath-got-me-hello-kutttichathan-says-actress-abhirami-suresh/articleshow/70789115.cms. பார்த்த நாள்: 26 February 2020. 
  7. "Hello Kuttichathan's Abhirami Suresh walks down memory lane; read post". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 November 2019. https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/hello-kuttichathans-abhirami-suresh-walks-down-memory-lane-read-post/articleshow/72120088.cms. பார்த்த நாள்: 27 February 2020. 
  8. Manu, Meera (13 July 2017). "Suresh sisters on the go". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/entertainment/mollywood/130717/suresh-sisters-on-the-go.html. பார்த்த நாள்: 26 February 2020. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிராமி_சுரேஷ்&oldid=3706905" இலிருந்து மீள்விக்கப்பட்டது