உள்ளடக்கத்துக்குச் செல்

அபிமன்யு சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிமன்யு சிங்
2013இல் வெளியான தலைவா படத்தில் அபிமன்யு சிங்
பிறப்பு20 செப்டம்பர் 1974 (1974-09-20) (அகவை 49)
சோன்பூர், பீகார், India
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சர்கம் (தி. 2008)

அபிமன்யு சிங் ( Abhimanyu Singh ) (பிறப்பு 20 செப்டம்பர் 1974) ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் முக்கியமாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பணியாற்றுகிறார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

அபிமன்யு சிங், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய அக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். 2009 ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யப் இயக்கிய குலால்' திரைப்படம் இவரது முதல் முக்கிய படமாக அமைந்தது.[1] இப்படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக 2010 ஸ்டார்டஸ்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2]

ராம் கோபால் வர்மா இயக்கி 2010 ஆம் ஆண்டு வெளியான ரத்தசரித்ரம் என்ற கும்பல் திரைப்படத்தில் இவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. இயக்குனர் ஓனிரின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தொடர் படமான ஐ ஆம் படத்தில் ஊழல் செய்யும் காவல்துறை அதிகாரியாக நடித்ததற்காக இவர் பாராட்டுகளைப் பெற்றார்.

2017 இல், இவர் ஸ்ரீதேவியுடன் மாம் படத்தில் நடித்தார். இயக்குனர் அனில் சர்மாவுடன் ஜீனியஸ் (2018) திரைப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்தார்.

இந்தி படங்களில் நடிப்பதுடன், தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் இரசினிகாந்தின் அண்ணாத்த மற்றும் ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2013 இல் வெளிவந்த[3][4] தலைவா படத்திலும் எதிர்மறை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "My wife suggested I consult a psychiatrist". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 22 December 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101222095057/http://www.hindustantimes.com/rssfeed/bollywood/My-wife-suggested-I-consult-a-psychiatrist/Article1-608610.aspx. 
  2. "Nomination of Stardust Awards 2011". 22 January 2011. Archived from the original on 25 January 2011.
  3. "'Thalaivaa' Box Office Collection: Has Vijay Starrer Earned ₹144 Crore at BO?". International Business Times. 23 August 2013. Archived from the original on 16 November 2019. பார்க்கப்பட்ட நாள் 25 June 2019.
  4. "Thalaivaa - Time To Lead". British Board of Film Classification. Archived from the original on 16 November 2020. பார்க்கப்பட்ட நாள் 9 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிமன்யு_சிங்&oldid=3919949" இலிருந்து மீள்விக்கப்பட்டது