அபிபுல்லோ இசுமாயிலோவிச் அப்துசமத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபிபுல்லோ இசுமாயிலோவிச் அப்துசமத்
Habibullo Ismailovich Abdussamatov
Хабибулло Исмаилович Абдусаматов
பிறப்புஅக்டோபர் 27, 1940 (1940-10-27) (அகவை 79)
சமர்காண்டு, உசுபெக் சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்புல்கோவோ வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்சமர்காண்டு அரசு பல்கலைக்கழகம்
இலெனின்கிராது அரசு பல்கலைக்கழகம்
புல்கோவோ வான்காணகம்
அறியப்படுவதுசூரிய இயற்பியல்
புவிக்கோள வெதுவெதுப்பாக்க ஐயுறவியல்

அபிபுல்லோ இசுமாயிலோவிச் அப்துசமத் (Habibullo Ismailovich Abdussamatov) (உருசியம்: Хабибулло Исмаилович Абдусаматов; அவ்வப்போது இவரது பெயரில் தலைப்பெழுத்துகளாக கே. ஐ. அல்லது எச். ஐ.சேர்க்கப்படும்; பிறப்பு: அக்தோபர் 27, 1940. சமர்காண்டு, உசுபெக் சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம்) ஓர் உசுபெக் இனவழி உருசிய, சோவியத் வானியற்பியலாளர் ஆவார். இவர் பன்னாட்டு விண்வெளி நிலைய உருசியப் பிரிவு வானளக்கையியல் திட்டத்தின் மேலாளர் ஆவார்.[1] இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் புனித பீட்டர்சுபர்கு சார்ந்த புல்கோவோ வான்காணக விண்வெளி ஆராய்ச்சித் தலைவரும் ஆவார்[2][3] இவர் புவிக்கோளக வெதுவெதுப்பாக்கம் இயற்கை நிகழ்வுகளால் ஏற்படுகிறது என நம்புகிறார்.[4]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் 1964 இல் இருந்தே புல்கோவோ வான்காணகத்தில் முதலில் ஆய்வுப் பயிற்சியாளராகத் தொடங்கி, பின்னர் பட்ட மேற்படிப்பு மாணவராகவும் இளம் ஆய்வாளராகவும் மூதாய்வாளராகவும் முதன்மை ஆய்வாளராகவும் இறுதியாக விண்வெளி ஆராய்ச்சி ஆய்வகத் தலைவராகவும் விளங்கினார்.[5] இவர் புல்கோவோ வான்காணக விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் பன்னாட்டு விண்வெளி நிலைய உருசியப் பிரிவின் நிலா அளக்கையியல்தலைவராகவும் ஆனார்.

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Measure temporary variations of shape and diameter of the Sun, as well as fine structure and dynamics of the granulation on the Service module of the Russian segment of the International Space Station". Pulkovo Observatory of Russian Academy of Sciences. பார்த்த நாள் 2013-06-07.
  2. Pulkovo Observatory
  3. photo
  4. "Russian academic says CO2 not to blame for global warming". Russian International News Agency. 15 January 2007. http://en.rian.ru/russia/20070115/59078992.html. பார்த்த நாள்: 24 August 2012. "Global warming results not from the emission of greenhouse gases [...], but from an unusually high level of solar radiation and [...] growth in its intensity." 
  5. Dr. Sci. Habibullo Abdussamatov

வெளி இணைப்புகள்[தொகு]