அபிஜீத் குப்தா
| அபிஜீத் குப்தா | |
|---|---|
2023 இல் அபிஜீத் குப்தா | |
| நாடு | India |
| பிறப்பு | 16 அக்டோபர் 1989 பில்வாரா, இந்தியா |
| பட்டம் | 2008 கிராண்ட் மாஸ்டர் |
| பிடே தரவுகோள் | 2628 (திசம்பர் 2021) |
| உச்சத் தரவுகோள் | 2667 (அக்டோபர் 2012) |
| உச்சத் தரவரிசை | எண். 83 (அக்டோபர் 2012) |
அபிஜீத் குப்தா (Abhijeet Gupta அக்டோபர் 16,1989) கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற ஓர் இந்தியச் சதுரங்க வீரர் ஆவார். பொதுநலவாயச் சதுரங்க வாகையாளர் பட்டத்தினை ஐந்து முறை வென்ற முதல் வீரர் ஆவார்.[1] தனது ஆரம்பக் கல்வியை பில்வாராவில் உள்ள ஏ 'ஸ் ஸ்டீவர்ட் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]அந்தோரா ஓபன் 2006, புது தில்லி (பார்ஸ்வநாத் 2007, பாலகேர் 2007 போட்டிகள்) ஆகியவற்றில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்குத் தேவையான தகுதிகளைப் பெற்றார்.[2] ஆகஸ்ட் 15,2008 இல், துருக்கியின் காசியான்டெப்பில் நடந்த உலக இளையோர் சதுரங்க வாகையாளர் போட்டியில் மாக்சிம் ரோட்ஸ்டைன், டேவிட் ஹோவெல், ஊ இபான் உள்ளிட்ட பல திறமையான வீரர்களை விட முன்னிலை பெறு வென்றார். விஸ்வநாதன் ஆனந்த், பென்டலா ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்குப் பிறகு இந்த மதிப்புமிக்க வாகையாளர் பட்டம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆவார். அதே ஆண்டில், புதுதில்லியில் நடைபெற்ற 6 ஆவது பார்ஸ்வநாத் ஓபன் போட்டியிலும் வெற்றி பெற்றார்.[3] 2011 ஆம் ஆண்டில், 13 வது துபாய் திறவுநிலை சதுரங்க வாகையாளர் போட்டி, இந்திய தேசிய பிரீமியர் செஸ் சாம்பியனில் முதலிடம் பெற்றார்.[4] 2013 ஆம் ஆண்டில் குப்தா பொதுநலவாய சதுரங்க வாகையாளர், அல் ஐன் சதுரங்கத் தொல்சீர் போட்டியில் வெற்றி பெற்றார்.[5] தனது சாதனைகளுக்காக 2011 இல் அருச்சுனா விருது பெற்றார்.2020 ஆம் ஆண்டில், குப்தா 8 வது டெல்லி சர்வதேச திறவுநிலைப் போட்டியில் 8.5/10 புள்ளிகளுடன் வென்றார்.[6]
துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த 2012 சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்திய தேசிய அணிக்காக விளையாடிய அபிஜீத் குப்தா, 4 வது இடத்தில் 2746 என்ற செயல்திறன் மதிப்பீட்டின் மூலம் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rao, Rakesh (2019-07-07). "Commonwealth chess championship: Fantastic fifth for Abhijeet Gupta". The Hindu (in Indian English). Retrieved 2019-09-13.
- ↑ "Title Applications - Grandmaster (GM) - Abhijeet Gupta". FIDE. Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 12 April 2018.
- ↑ Crowther, Mark (2008-01-21). "TWIC 689: 6th Parsvnath International Open". London Chess Center. Archived from the original on 30 September 2011. Retrieved 28 November 2009.
- ↑ "Indian GM Abhijeet Gupta wins Dubai Open". ChessBase. 2011-04-20. Retrieved 23 April 2011.
- ↑ "Abhijeet Gupta first in Al Ain Chess Classic". Chessdom. 2013-12-28. Retrieved 18 November 2015.
- ↑ "18th Delhi International Open Grandmasters Chess Tournament 2020 CAt "A" February 2020 India FIDE Chess Tournament report". ratings.fide.com. Retrieved 2021-04-05.
- ↑ Men's Chess Olympiad: Abhijeet Gupta. OlimpBase
வெளியிணைப்புகள்
[தொகு]- Gupta, Abhijeet rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- அபிஜீத் குப்தா player profile and games at Chessgames.com