அபிசரவணன்
அபிசரவணன் | |
---|---|
பிறப்பு | மதுரை |
மற்ற பெயர்கள் | சரவணகுமார் |
பணி | நடிகர் |
அபிசரவணன் (Abi Saravanan) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த்திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் டூரிங் டாக்கீஸ் (2015) மற்றும் சாகசம் (2016) உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.[1]
தொழில்
[தொகு]இவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தபின், நடிகர் ஆக விரும்பி, திரைத் துறையில் நுழைய வாய்ப்புகளைத் தேடினார். துவக்கத்தில் அட்டகத்தி (2012) மற்றும் குட்டிப் புலி (2013) ஆகியவற்றில் சிறிய துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் இவர் எஸ். எஸ். குமரனின் தமிழ்-மலையாள இருமொழித் திரைப்படமான கேரளா நட்டிளம் பெண்களுடனே (2014) திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரத்திரத்தை ஏற்று நடித்தார்.[2][3][4] இவரது இரண்டாவது படம் டூரிங் டாக்கீஸ் (2015), இப்படத்தில் எஸ். ஏ. சந்திரசேகரின் இளவயது பாத்திரத்தில் நடித்தார்.[5] இவர் பின்னர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்த சாகசம் (2016) படத்தில் துணைப் பாத்திரத்தில் நடித்தார்.
2015 இல் இவர் பல குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களான அறிமுக இயக்குநரான ஜெய்யின் இயக்கத்தில் பிளஸ் ஆர் மைனஸ் , சரவண பாண்டியனின் இறையன், அந்த ஒரு நாள், நாடகம் போன்ற படங்களில் நடித்தார்.[6]
போராட்டங்களில்
[தொகு]மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுக்க ஆதரவாக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார். தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் அவர்களோடு கடைசிவரை இருந்து போராடினார்.[7]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் |
குறிப்பு |
---|---|---|---|
2012 | அட்டகத்தி | ||
2013 | குட்டிப் புலி | ||
2014 | கேரள நாட்டிளம் பெண்களுடனே | உண்ணிகிருஷ்ணன் | |
2015 | டூரிங் டாக்கீஸ் | ஆன்டணி | |
2016 | சாகசம் | ||
2016 | பட்டதாரி
|
சிவா | |
2017 | பிளஸ் ஆர் மைனஸ் | தயாரிப்பில் | |
2017 | இறையான் | தயாரிப்பில் | |
2017 | அந்த ஒரு நாள் | தயாரிப்பில் | |
2017 | நாடகம் | தயாரிப்பில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/Kerala-Nattilam-Pengaludane/articleshow/32360216.cms
- ↑ http://www.deccanchronicle.com/140106/entertainment-mollywood/article/surprise-package
- ↑ http://www.thehindu.com/features/cinema/cinema-columns/etcetera-slice-of-village-life/article4985392.ece
- ↑ http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-kerala-nattilam-pengaludane-a-slice-of-kerala/article4817403.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-08. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
- ↑ http://www.thehindu.com/features/cinema/etcetra/article6945376.ece
- ↑ ஆர்.சி.ஜெயந்தன் (21 மார்ச் 2018). "நடிகரா, போராளியா? - நடிகர் அபிசரவணன் பேட்டி". செவ்வி. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)