உள்ளடக்கத்துக்குச் செல்

அபா தவேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபா தவேசர்
பிறப்புஅபா தவேசர்
1 சனவரி 1974 (1974-01-01) (அகவை 52)
புது தில்லி, இந்தியா
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
காலம்2000–நாளது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்பேபிஜி, பேமிலி வேல்யூஸ், தட் சம்மர் இன் பாரிஸ், மினிப்ளேனர்
இணையதளம்
www.abhadawesar.com

அபா தவேசர் (Abha Dawesar: பிறப்பு: 1 சனவரி, 1974) இந்தியாவில் பிறந்த ஆங்கில புதின எழுத்தாளர் ஆவார்.[1] இவரது புதினங்களில் குறிப்பிடத்தக்கவை: பேபிஜி, பேமிலி வேல்யூஸ், தட் சம்மர் இன் பாரிஸ், மினிப்ளேனர். 2005ஆம் ஆண்டு புதினமான பேபிஜி, நேர்பாலீர்ப்பு பெண் புனைகதைக்கான லாம்டா இலக்கிய விருதையும் இசுடோன்வால் புத்தக விருதையும் வென்றது.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

அபா தவேசர் புதுதில்லியில் பிறந்தார்.[2] ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர அமெரிக்காவுக்குச் சென்றார். அமெரிக்காவில் 1995இல் பட்டம் பெற்றார்.[2]

தனது விருது பெற்ற இரண்டாவது புதினமான பேபிஜியை (2005) வெளியிடுவதற்கு முன்பு, அபா தவேசர் மன்ஹாட்டனில் உள்ள உலகளாவிய நிதிச் சேவை நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் தனது நேரத்தை எழுதுவதற்கு ஒதுக்குவதற்காக தனது வேலையை விட்டுவிட்டார்.[3]

தாவேசர் ஹார்வர்டில் மாணவராக இருந்ததிலிருந்தே புகைப்படம் எடுத்தல், காட்சி, காணொளிக் கலை ஆகியவற்றில் செலவிட்டு வருகிறார். இவரது படைப்புகள் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு காட்சியகங்கள், அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[4]

2010ஆம் ஆண்டில், ரோட்ரிகோ பெர்னார்டோ இயக்கிய லவ் அண்ட் தி சிட்டிஸ் திரைப்படத்திற்கான திரைக்கதையின் ஒரு பகுதியை அபா எழுதினார்.[5]

2013 முதல், எண்ணிம தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளப் பிரச்சினைகள், சமூக நடத்தை, அனுபவத்தில் அதன் விளைவுகள் குறித்து தவேசர் பேசி வருகிறார்.[6]

விருதுகள்

[தொகு]
  • பிக்சன் ஃபெலோ, நியூயார்க் கலை அறக்கட்டளை (2000) [7][2]
  • நேர்பாலீர்ப்பு பெண் புனைகதைக்கான இலாம்ப்டா இலக்கிய விருது, பேபிஜி (2005)[8]
  • இசுடோன்வால் புத்தக விருது, அமெரிக்க நூலக சங்கம், பேபிஜி (2006)[9]

நூலியல்

[தொகு]

புதினங்கள்.

[தொகு]
  • மினிப்ளேனர் (2000) (இந்தியாவில் பெங்குயின் புக்ஸ் மூலம் தி த்ரீ ஆஃப் அஸ் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது)
  • பேபிஜி (2005) (இசுடோன்வால் புத்தக விருது & இலாம்ப்டா இலக்கிய விருது.) (2006) [8]
  • தட் சம்மர் இன் பாரிஸ் (2006) [10][11]
  • ஃபேமிலி வேல்யூஸ் (2011)
  • சென்சோரியம் (2012)
  • மாடிசன் ஸ்கொயர் பார்க் (2016)

சிறுகதைகள்

[தொகு]
  • தி குட் கிங் இன் மெனான்: அனில் சிங்,
  • வந்தனா (2014)
  • பிரேக்கிங் தி பவ்: ஸ்பெகுலேடிவ் ஃபிக்‌ஷன் இன்ஸ்பையர்டு பை ராமாயணா (ஜுபான் புத்தகங்கள். ப. 47. ISBN 9789383074174)

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அபா தவேசர் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Oh, Seiwoong (2009). Encyclopedia of Asian-American Literature. Infobase Publishing. p. 60. ISBN 9781438120881.
  2. 1 2 3 4 "Abha Dawesar". Contemporary Authors Online. 2007. Retrieved 13 October 2018."Abha Dawesar". Contemporary Authors Online. 2007. Retrieved 13 October 2018.
  3. Kamesawaran, Shilpa (Summer 2011). "Interview: Abha Dawesar". Urban Confustions Journal (1). https://urbanconfustionsjournal.files.wordpress.com/2011/11/dawesar-2011.pdf. பார்த்த நாள்: 13 October 2018.
  4. "Abha Dawesar". abhadawesar.com. Archived from the original on 30 June 2008. Retrieved 2018-10-13.
  5. "Love Bard". https://indianexpress.com/article/cities/chandigarh/love-bard-2/.
  6. "Abha Dawesar: How Do Our Screens Distort Our Sense of Time?". https://www.npr.org/2015/09/14/440306123/how-do-our-screens-distort-our-sense-of-time.
  7. New York Foundation for the Arts Directory of Art Fellows, 1985-2013 (PDF). New York, NY: New York Foundation for the Arts. 2013.
  8. 1 2 "18th Annual Lambda Literary Awards". Lambda Literary. 2006. Archived from the original on 11 டிசம்பர் 2013. Retrieved 18 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: bot: original URL status unknown (link). Lambda Literary. 2006. Archived from the original on 11 December 2013. Retrieved 18 November 2014.
  9. "Stonewall Book Awards List". 9 September 2009. http://www.ala.org/rt/glbtrt/award/stonewall/honored.
  10. Reese, Jennifer (21 June 2006). "That Summer in Paris Review". Entertainment Weekly. Archived from the original on 29 November 2014. Retrieved 18 November 2014.
  11. "That Summer in Paris". https://www.publishersweekly.com/978-0-385-51749-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபா_தவேசர்&oldid=4563902" இலிருந்து மீள்விக்கப்பட்டது