அபாயகரமான பாலியல் நடத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபாயகரமான பாலியல் நடத்தை (Risky sexual behavior) அல்லது இடர்மிகு பாலியல் நடத்தை என்பது ஒரு நபர் பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட பிற நபருடன் பாலியல் உறவுகொள்ளும் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் அதிகரிக்கப்படும் சாத்தியமான பாதிப்புகள் குறித்ததாகும்.[1] கர்ப்பமாதல் அல்லது தனது இணையரைக் கர்ப்பமாக்குதல் என்ற நிகழ்வில் சுய நடத்தை அல்லது இணையரின் நடத்தையை இது குறிக்கிறது. பாதுகாப்பற்ற உடலுறவு, வாய்வழிப் பாலுறவு குறிப்பிட்ட இணையர் இல்லாத இணையர், எய்ட்ஸ் நோயாளி அல்லது நரம்புவழி மருந்துட்கொள்பவர், ஆகியோருடன் பாலுறவு போன்றவை அபாயகரமான பாலியல் நடத்தைகள் ஆகும்.[2] தொடர்ச்சியாக மருந்து உட்கொள்வது என்பதும் அபாயகரமான பாலியல் நடத்தையுடன் தொடர்புடையதாகும்.[3]

விளக்கம்[தொகு]

  • ஆணுறையின்றி பாலியல் உறவில் ஈடுபடுதல்
  • வாய்வழியாக பிறப்புறுப்புத் தொடர்பு
  • மிக இளம் வயதிலேயே பாலியல் உறவைத் தொடங்குதல்
  • பலருடன் பாலியல் உறவு கொள்ளுதல்
  • அபாயகரமான இணையருடன் உறவுகொள்ளுதல், சிலர் பலருடன் பாலியல் உறவு கொள்வோருடன் உறவு வைத்துள்ளவராகவோ அல்லது பாலியல் நோய் பாதிக்கப்பட்ட ஒருவராகவோ இருக்கலாம்.
  • குதவழி பாலியல் உறவு
  • போதைப்பொருள் உட்கொள்வோருடனான பாலியல் உறவு
  • பாலியல் தொழிலாளர்களுடன் உறவு

ஆகியவை மிகவும் ஆபத்தான பாலியல் நடவடிக்கைகளாக இருக்கலாம்.[4]

அபாயகரமான பாலியல் நடத்தை என்பது பாதுகாப்பற்ற உடலுறவு, பலருடன் உறவுகொள்ளுதல், சட்டவிரோதமான மருந்து பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.[5]

மது அருந்துதல் மற்றும் தவறான சட்டவிரோதமான மருந்துகளை உட்கொள்ளுதல் ஆகியவை கொணோறியா, கிளமிடியா,ட்ரைக்கோமோனியாசிஸ், மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் ஆகியவற்றை அதிகரிக்கும் ஆபத்தான காரணிகளாகும். குதவழி பாலியல் உறவின்மூலம் ஆண்குறியில் காயம் தென்படல் மிகவும் ஆபத்தான பாலியல் நடத்தையின் அறிகுறியாகும்.[6]

வட அமெரிக்க இளைஞர்கள் பாலியல் உறவில் நன்கு செயல்பாடுள்ளவராக இருந்தாலும் நோய்த்தொற்று அல்லது கருத்தரித்தலுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களின் தவறான புரிதல் மற்றும் தவறான நடவடிக்கைகள் அவர்களை அபாயகரமான பாலியல் நடத்தைகளின் ஊக்குவிக்க முனைகிறது. அபாயகரமான பாலியல் நடத்தைகள் பாலியல் உறவில் ஈடுபடும் இருவரையும் சில நேரஙக்ளில் கருப்பை வாய்ப் புற்றுநோய், வேற்றிடச்சூல், மலட்டுத்தன்மை போன்ற சில மோசமான விளைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன.[2] அடிக்கடி உடலைத் துளையிடுதல், பச்சை குத்துதல் ஆகியவையும் அபாயகரமான பாலியல் நடத்தையுடன் தொடர்புடையதாகும்.[6]

நோயியல்[தொகு]

பெரும்பாலும் பதினைந்து முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட கனடியர் மற்றும் அமெரிக்க இளைஞர்கள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பாலுறவு வைத்திருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இவர்களில் 23.9% கனடிய மற்றும் 45.5 % அமெரிக்க இளம்பருவப் பெண்களும் கடந்த வருடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையருடன் பாலுறவு கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.இதே மக்கள் தொகையில் 32.1% கனடிய ஆண்களும் 50.8% அமெரிக்க ஆண்களும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையருடன் பாலுறவில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனர்.[2]

தொடர்புள்ளவற்றை இனங்காணுதல்[தொகு]

அபாயகரமான பாலியல் நடத்தைக்கு பல்வேறு காரணிகள் தொடர்புபடுத்தப்படுகிறது. சீரற்ற ஆணுறை பயன்பாடு, மதுப்பழக்கம், போதைக்காக ஒரே நேரத்தில் பலமருந்துகளைச் சேர்த்து உண்ணும் உளநோய், மன அழுத்தம், சமுதாய ஆதரவின்மை, அண்மையில் சிறைவாசம், இணையரோடு வாழ்தல், நெருக்கமாக இருத்தல், வல்லுறவு மற்றும் குழந்தைப்பருவப் பாலியல் முறைகேடு ஆகியவற்றின் மூலம் அபாயகரமான நடத்தை உள்ளோரை இனங்கண்டு மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இருப்பினும் இந்தக் காரணிகளுக்கும் ஆபத்தான பாலியல் நடத்தைக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விரிவாக ஆய்வு செய்வது அவசியம்.[7][8] ஊக்கப்படுத்தும் பயிற்சிகள் தன்முனைப்புத் திறன், கல்வி மற்றும் நடத்தைக் குறுக்கீடுகள், தீவிர மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ஆலோசனை வழங்கல், பங்களிப்போரின் அறிவை மேம்படுத்துதல், மனப்பான்மைகள், நம்பிக்கைகள், தன்முனைப்புத் திறனுட்பட்ட நன்னடத்தைப் பயிற்சிகள் ஆகியவை ஆபத்தான பாலியல் நடத்தைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்.[5][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dimbuene, Zacharie Tsala; Emina, Jacques B.O.; Sankoh, Osman (2014). "UNAIDS ‘multiple sexual partners’ core indicator: promoting sexual networks to reduce potential biases". Global Health Action 7 (1): 23103. doi:10.3402/gha.v7.23103. பன்னாட்டுத் தர தொடர் எண்:1654-9716. 
  2. 2.0 2.1 2.2 Hall, Peter A. (2004). "Risky Adolescent Sexual Behavior: A Psychological Perspective for Primary Care Clinicians". Topics in Advanced Practice Nursing eJournal.
  3. Frayer, Cheryl D; Hirsch, Rosemarie (September 11, 2007). "Advance Data From Vital and Health Statistics, Drug Use and Sexual Behaviors Reported by Adults in the United States, 1999 – 2002" (PDF). Centers for Disease Control and Prevention, National Center for Health Statistics. பார்க்கப்பட்ட நாள் April 21, 2017.
  4. "High Risk Sexual Behaviour". British Columbia, HealthLinkBC. May 27, 2016. Archived from the original on மார்ச் 21, 2017. பார்க்கப்பட்ட நாள் April 21, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |3= (help)
  5. 5.0 5.1 5.2 Pandor, Abdullah; Kaltenthaler, Eva; Higgins, Agnes; Lorimer, Karen; Smith, Shubulade; Wylie, Kevan; Wong, Ruth (2015). "Sexual health risk reduction interventions for people with severe mental illness: a systematic review". BMC Public Health 15 (1). doi:10.1186/s12889-015-1448-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2458. 
  6. 6.0 6.1 Potter, Patricia (2013). Fundamentals of nursing. St. Louis, Mo: Mosby Elsevier. பக். 386. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780323079334. https://archive.org/details/isbn_2900323079333. 
  7. Engstrom, M, Winham, KM, & Gilbert, L. Types and characteristics of childhood sexual abuse: How do they matter in HIV sexual risk behaviors among women in methadone treatment in New York City? Substance Use & Misuse, 2016; 51:3, 277-294
  8. Icard LD, Jemmott,John B., I.,II, Teitelman A, O’Leary A, Heeren GA. Mediation effects of problem drinking and marijuana use on HIV sexual risk behaviors among childhood sexually abused South African heterosexual men. Child Abuse & Neglect, 2014; 38(2): 234-242