அபாயகரமான ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபாயகரமான ஆற்றல் (Hazardous energy) என்பது தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியப் பிரிவில் சேமிக்கப்பட்ட ஆற்றலை வெளியேற்றுவது போன்ற செயல்பாடுகளால் தொழிலாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு ஆற்றல் மூலத்தையும் குறிக்கும் என்று வரையறை செய்யப்படுகின்றது.[1][2] [3] மின்சாரம், இயந்திரம், வெப்பம், இரசாயனம், நீர்மவியல் மற்றும் காற்றழுத்த ஆற்றல் மூலங்கள் உட்பட அனைத்தும் இதில் அடங்கும். இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பராமரிப்பின் போது, எதிர்பாராத தொடக்கம் அல்லது சேமிக்கப்பட்ட ஆற்றலை வெளியிடுவது போன்ற செயல்பாடுகளில் எதிர்பாராத ஆற்றல் வெளியீட்டைக் கட்டுப்படுத்தத் தவறும்போது இயந்திரம் தொடர்பான காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படலாம். தீக்காயங்கள், நசுங்குதல், வெட்டுப்படுதல், கீறல், துண்டித்தல் அல்லது உடல் பாகங்கள் உடைதல் போன்ற காயங்களும் ஏற்படலாம். பூட்டி வை குறித்து வை போன்ற அணுகல் கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் இந்த ஆற்றல் மூலங்களிலிருந்து ஏற்படும் ஆபத்தை பல வழிகளில் கட்டுப்படுத்தலாம்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Control of Hazardous Energy". Occupational Safety and Health Administration. United States Department of Labor.
  2. Safety, Government of Canada, Canadian Centre for Occupational Health and. "(none)". www.ccohs.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Safety, Government of Canada, Canadian Centre for Occupational Health and. "(none)". www.ccohs.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. (in en-us) Using lockout and tagout procedures to prevent injury and death during machine maintenance.. 2011-04-01. doi:10.26616/NIOSHPUB2011156. https://www.cdc.gov/niosh/docs/wp-solutions/2011-156/. 
  5. (in en-us) NIOSH alert: preventing worker deaths from uncontrolled release of electrical, mechanical, and other types of hazardous energy.. 1999-08-01. doi:10.26616/NIOSHPUB99110. https://www.cdc.gov/niosh/docs/99-110/. 
  6. Parker, David L.; Yamin, Samuel C.; Xi, Min; Brosseau, Lisa M.; Gordon, Robert; Most, Ivan G.; Stanley, Rodney (January 2016). "Findings From the National Machine Guarding Program". Journal of Occupational and Environmental Medicine 58 (1): 61–68. doi:10.1097/jom.0000000000000594. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-2752. பப்மெட்:26716850. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபாயகரமான_ஆற்றல்&oldid=3630216" இலிருந்து மீள்விக்கப்பட்டது