அபவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அபவாதம் எனில் அறியாமை எனும் அஞ்ஞானத்தால் கயிற்றிலே தோற்றம் கொண்டுள்ள பாம்பை புறகணித்து, அறிவு (ஆத்ம ஞானம்) ஏற்பட்ட உடன் அது பாம்பல்ல, கயிறுதான் என்ற உண்மையை அறிவது போல, அத்யாரோபம் எனும் முறையில் பிரம்மவஸ்துவின் மீது ஏற்றப்பட்ட பொய்யான இந்த உலகத்தைப் வேதாந்த சாத்திரங்கள் எனும் பிரமாணங்கள், யுக்தி, அனுபவங்களின் மூலம் புறக்கணித்து, அது பிரம்மம் தான் என்று அறிய வைக்கும் முறைதான் அபவாதம் ஆகும்.

பிரம்மத்திடம் இருந்து எந்த முறையில் இந்த உலகமானது `தோற்றம்` கொண்டதோ அதற்கு எதிரான முறையில் இந்த உலகத்தை பிரம்ம வஸ்துவிடம் `ஒடுக்கும்` பொழுது (லயம் ஏற்படச் செய்யும் பொழுது), பிரம்மம் ஒன்று மட்டுமே எஞ்சியிருக்கும்.

உசாத் துணை[தொகு]

  • வேதாந்த சாரம், நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபவாதம்&oldid=1831865" இருந்து மீள்விக்கப்பட்டது