அபர்ணா நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபர்ணா நாயர்
பிறப்பு30 நவம்பர் 1989 (1989-11-30) (அகவை 34)
தேஞ்ஞிப்பாலம், மலப்புறம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கொச்சி, புனித தெரசாள் கல்லூரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007 – தற்போது வரை

அபர்ண நாயர் (Aparna Nair) (பிறப்பு 30 நவம்பர் 1989) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளத் திரைப்படத்துறையில் தோன்றி வருகிறார்.

சுயசரிதை[தொகு]

அபர்ணா, கேரளாவின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள தேஞ்ஞிப்பாலம் புனித பால் மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர், கொச்சி, செயின்ட் தெரசா கல்லூரியிலும் பயின்றார். அ. க. லோகிததாசின் இயக்கத்தில் வெளியான "நிவேதயம்" என்ற படம் மூலம் இவர் அறிமுகமானார். [1] பிறகு, "சாயாமுகி" என்ற படத்தில் பாஞ்சாலியை சித்தரித்தார். இதில் மோகன்லால் மற்றும் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். [2] 2009 ஆம் ஆண்டு திரைப்படமான மேகதீர்த்தத்தில் மணிகுட்டனுக்கு இணையாக கவியூர் பொன்னம்மாவின் சிறு வயதான பாத்திரத்தில் நடித்தார். கயம் என்ற படத்தில் நடிகர் பாலாவின் இணையாக நடித்தார். [3] 2010 இல், இவர் காக்டெய்லில் நடித்தார். இவரது அறிமுகம் தமிழ் அறிமுக இயக்குநர் கே.மகேசுவரன் இயக்கிய "எதுவும் நடக்கும்" என்ற படத்தின் மூலம் தமிழகத் திரைப்படத்துறையில் நுழைந்தார். [4]

பின்னர் இவர் பியூட்டிஃபுல் படத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றார். [5] அடுத்து சங்கர் இயக்கிய ஸ்ட்ரீட்லைட் என்பதில் நடித்தார். அதில் இவர் நான்கு வேடங்களில் நடித்திருந்தார். [6] மல்லு சிங், தட்டத்தின் மராயத்து போன்ற படங்களிலும், ஜோஷியின் இயக்கத்தில் "ரன் பேபி ரன்" என்ற படத்திலும் நடித்தார். [7]

குறிப்புகள்[தொகு]

  1. "Aparna Nair, beautiful star on the horizon". Deccan Chronicle. Archived from the original on 9 January 2012. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
  2. "Upbeat". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
  3. "ഹിറ്റുകളുടെ കൂട്ടുകാരി , Interview - Mathrubhumi Movies" பரணிடப்பட்டது 17 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்.
  4. "APARNA NAIR". Archived from the original on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
  5. "Aparna Nair, beautiful star on the horizon". Deccan Chronicle. Archived from the original on 9 January 2012. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
  6. Admin. "Aparna Nair" பரணிடப்பட்டது 17 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்.
  7. "Upbeat". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபர்ணா_நாயர்&oldid=3173852" இலிருந்து மீள்விக்கப்பட்டது