அபர்ணா சந்திரா
அபர்ணா சந்திரா | |
|---|---|
| பிறப்பு | 6 சனவரி 1971 புதுடில்லி, இந்தியா |
| கல்வி | தேசிய வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் |
| பணி | ஆடை வடிவமைப்பாளர் |
அபர்ணா சந்திரா (Aparna Chandra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆடை வடிவமைப்பாளரும், ஒப்பனையாளரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]அபர்ணா சந்திரா 1971 சனவரி 6 அன்று இந்தியாவில் உள்ள புது தில்லியில் பிறந்தார்.[1][2] இவரின் தாயார் ஆசா குழந்தைகளுக்கான ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.[3] சந்திரா தேசிய ஆடை வடிவமைப்பாளர் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி பயின்றார். மேலும் இவர் இந்திய வடிவமைப்பாளர் ரோகித் கோசுலாவிடம் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார்.[4]
இவர் தனது படிப்பை முடித்த பிறகு, குறைந்த அளவில் தனது ஆடை ஆடைகளுடன் தனது வடிவமைப்பு பணியைத் தொடங்கினார். இது பத்து ஆண்டுகள் வரை செயல்பட்டது. அபர்ணா சந்திராவிற்கு இதன்மீது போதுமான ஆர்வம் இல்லாததால் இவர் மேலும் ஒரு புதுவிதமாக வடிவமைக்கத் தொடங்கினார். [3][5] 2015 ஆம் ஆண்டில் எல்லே என்பவர் இவரது வடிவமைப்புகளைப் பற்றி ஆடம்பரமானதாக இல்லை, ஆனால் எளிமையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.[6] 2014 ஆம் ஆண்டில், இவர் இந்தியாவின் ஆடை வடிவமைப்புத் தலைவராக மீண்டும் பிராண்டான நிக்கோபரில் திரும்பினார். [6] 2018 செப்டம்பர் மாதம் அபர்ணா சந்திராவின் புதுவிதமான தனி வடிவமைப்புகள் வெளியிடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hindi Fashion Designer Aparna Chandra". nettv4u (in ஆங்கிலம்). Retrieved 9 March 2019.
- ↑ "Aparna Chandra, stitch by stitch". The Times of India. 14 September 2003. https://timesofindia.indiatimes.com/delhi-times/Aparna-Chandra-stitch-by-stitch/articleshow/181002.cms. பார்த்த நாள்: 9 March 2019.
- 1 2 3 Adhikary, Sharmi (9 December 2018). "Back with a bang". The New Indian Express. https://www.newindianexpress.com/lifestyle/fashion/2018/dec/09/back-with-a-bang-1908398.html.
- ↑ "Aparna Chandra" (in en). Hindustan Times. 15 July 2003. https://www.hindustantimes.com/india/aparna-chandra/story-BYh6qxGBIpxmHR0JPetzNN.html. பார்த்த நாள்: 9 March 2019.
- ↑ "Small talk: The girl from wonderland". Mumbai Mirror (in ஆங்கிலம்). 16 September 2018. Retrieved 9 March 2019.
- 1 2 Jacob, Nidhi (25 April 2016). "Aparna Chandra makes a big comeback with Nicobar". Elle India. http://elle.in/magazine/aparna-chandra-makes-a-big-comeback-with-nicobar/. பார்த்த நாள்: 9 March 2019.