அபர்ணதி
அபர்ணதி | |
|---|---|
| பிறப்பு | கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகை, வடிவழகி |
| செயற்பாட்டுக் காலம் | 2021-தற்போது வரை |
அபர்ணதி (Abarnathi) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். இவர் தேன் (2021) படத்தின் மூலம் அறிமுகமாகி, ஜெயில் (2021) மற்றும் இறுகப்பற்று (2023) படங்களில் நடித்த தனது கதாபாத்திரங்கள் மூலம் நன்கு அறியப்பட்டார். திரையுலகில் நுழைவதற்கு முன்பு, அபர்ணதி எங்க வீட்டு மாப்பிள்ளை (2018) என்ற உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.
துவக்ககால வாழ்க்கை
[தொகு]அபர்ணதி கும்பகோணத்தில் பிறந்தார், நீடமங்கலத்தில் உள்ள நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் சென்னையில் வளர்ந்தார். கல்லூரி மாணவியாக இருந்தபோது ஆடை வடிவமைப்பு படித்தார். [1]
தொழில்
[தொகு]அபர்ணதி, ஆர்யா நடித்த எங்க வீட்டு மாப்பிள்ளை (2018) என்ற உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராக தொலைக்காட்சியில் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் இருந்தபோது, இவரது அணுகுமுறை மற்றும் ஆர்யாவை இவர் அழைத்த விதம் ஆகியவற்றால் கவனத்தை ஈர்த்தார். [2] [3] நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், இறுதியில் இவர் ஒரு நடிகையாகப் பணியாற்ற வாய்ப்புகளைப் பெற்றார். [4] [5]
2018 ஆம் ஆண்டின் மத்தியில், அபர்ணதி வசந்தபாலனின் ஜெயில் (2021) திரைப்படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். வட சென்னையில் நடக்கும் சண்டித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம், மூன்று ஆண்டுகள் கழித்து தாமதமாக வெளியானது. [6] [7] தேன் திரைப்படத்தில் இவரது நடிப்பு சிறந்த அறிமுக நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றுத் தந்தது, அதே நேரத்தில் இவர் உடன்பால் (2022) திரைப்படத்தில் ஒரு இல்லத்தரசியாக நடித்தார். [8] பின்னர் இவர் டீமன் (2023) மற்றும் இறுகப்பற்று (2023) என்ற கதைக்கோவைத் திரைப்படத்தில் தோன்றினார். [9] [1]
அபர்ணதி ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக மாயப்புத்தகத்திலும், லிங்கேஷுக்கு ஜோடியாக நாற்கரப்போர் படத்திலும் நடித்தார். [10] [11]
திரைப்படவியல்
[தொகு]- திரைப்படங்கள்
| ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2021 | ஜெயில் | ரோசாமலர் | |
| தேன் | பூங்கொடி | ||
| 2022 | உடன்பால் | பிரேமா | |
| 2023 | டீமன் | கார்த்திகா | |
| இறுகப்பற்று | பவித்ரா | ||
| 2024 | சாமணியன் | மனிஷா | |
| மாயப் புத்தகம் | பஞ்சமாதேவி | ||
| 2026 | வெஞ்சன்ஸ் | வேணி | [12] |
- தொலைக்காட்சி
- எங்க வீட்டு மாப்பிள்ளை (2018)
பாராட்டுக்கள்
[தொகு]- 2020 சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான சைமா விருது – தமிழ் - தேன் - பரிந்துரைக்கப்பட்டது
- 2020 தமிழக அரசின் திரைப்பட விருதுகள்-சிறப்புப் பரிசு சிறந்த நடிகை - தேன் - வென்றது
- 2024 சிறந்த துணை நடிகைக்கான ஜே.எப்.டபிள்யூ விருது - இறுகபற்று - வென்றது [13]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Varsha (2023-11-08). "Abarnathi : Meet Pavithra From Irugapatru!". Just for Women (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 10 November 2023. Retrieved 2023-11-10.
- ↑ "Abarnathi says she is much stronger after the show". 17 April 2018. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/abarnathi-says-she-is-much-stronger-after-the-show/articleshow/63798433.cms.
- ↑ "I don't like Abarnathi's way of addressing Arya: Enga Veetu Mapillai host, Sangeetha". 4 April 2018. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/i-dont-like-abarnathis-way-of-addressing-arya-enga-veetu-mapillai-host-sangeetha/articleshow/63598049.cms.
- ↑ "Enga Veetu Mapillai's contestant Abarnathi promises to meet her fans soon". 20 April 2018. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/enga-veetu-mapillais-contestant-abarnathi-promises-to-meet-her-fans-soon/articleshow/63842794.cms.
- ↑ "EVM's Abarnathi has a fan moment; clicks a snap with Superstar Rajnikanth". 1 May 2018. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/evms-abarnathi-has-a-fan-moment-clicks-a-snap-with-superstar-rajnikanth/articleshow/63984149.cms.
- ↑ "Abarnathi to romance GV Prakash". Deccan Chronicle. 25 May 2018. Archived from the original on 27 September 2023. Retrieved 27 September 2023.
- ↑ "Prakash and Abarnathi's nightmarish experience". Deccan Chronicle. 3 October 2018. Archived from the original on 27 September 2023. Retrieved 27 September 2023.
- ↑ "Varisu Vs Thunivu: Actress Abarnathi Reveals the Film She'll Watch First". News18. 29 December 2022. Archived from the original on 27 September 2023. Retrieved 27 September 2023.
- ↑ "Demon Movie Review : A horror film that fails to scare us". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/demon/movie-review/103882990.cms?from=mdr.
- ↑ "Abarnathi, Srikanth and Ashok star in fantasy film Mayaputhagam". 31 October 2021. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/abarnathi-srikanth-and-ashok-star-in-fantasy-film-mayaputhagam/articleshow/87398752.cms.
- ↑ "Exclusive! Director Sri Vetri Opens Up About His Debut Tamil Film Narkarappor Starring Lingesh & Abarnathi". filmibeat.com. 28 July 2023. Archived from the original on 27 September 2023. Retrieved 27 September 2023.
- ↑ "Vengeance trailer: Veni's straightforward acts of governance attract enemies". Cinema Express (in ஆங்கிலம்). 2026-03-01. Retrieved 2026-03-26.
- ↑ Abhay, Varsha (17 March 2024). "Empowering Performances: Aishwarya Rajesh, Meetha Raghunath and Bhavani Sre win Best Actress at the JFW Movie Awards 2024!". JFW (in ஆங்கிலம்). Archived from the original on 6 March 2026. Retrieved 6 March 2026.