அபராஜித கோபி
அபராஜித கோபி | |
|---|---|
| பிறப்பு | 1931 |
| இறப்பு | 28 திசம்பர் 2020 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
| பட்டம் | சட்டப் பேரவை உறுப்பினர்- மேற்கு வங்காளம் |
| பதவிக்காலம் | 1977 - 1991 |
அபராஜிதா கோபி (Aparajita Goppi)(1931 - 28 திசம்பர் 2020) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டில் அனைத்திந்திய பார்வர்டு பிளாக்கின் மத்தியக் குழு உறுப்பினரானார்.[1] இவர் மேற்கு வங்காளத்தில் கட்சியின் செயலக உறுப்பினராக இருந்தார். மேலும் 2000களின் முற்பகுதியில், கோப்பி மேற்கு வங்காளத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் மிக உயர்ந்த பதவியில் உறுப்பினராக இருந்தார்.[2] இவர் கட்சியின் மகளிர் பிரிவான அகில இந்திய அக்ரகாமி மகிளா சமிதியின் தலைவராக இருந்தார்.[3] கோபி 1977 மற்றும் 1991-க்கு இடையில் மேற்கு வங்கச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியிலிருந்தார். கோபி அசோக் கோசியுடன் இணைந்து பணியாற்றினார்.
கூச் பெகாரில் உள்ள சுனிதி அகாதமியில் ஒரு மாணவராக, நேதாஜி சுபாசு சந்திர போசின் பிறந்தநாளைக் கொண்டாடும் உரிமைக்கான போராட்டத்தில் மாணவர்களை வழிநடத்தினார்.[4]
1972ஆம் ஆண்டு மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் கோபி கூச் பெகார் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 19,846 வாக்குகளுடன் (40.07%) இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 1977 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 32,792 வாக்குகளைப் பெற்றார் (63.07%). 1982ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட கோபி, கூச் பெகார் வடக்கு தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். 46,810 வாக்குகள் (57.15%) பெற்றார். மேலும் 1987 தேர்தலில் 49,172 வாக்குகள் (54.74%) பெற்றார்.
இறப்பு
[தொகு]கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகத் திசம்பர் 28, 2020 அன்று கோபி இறந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ All India Forward Block. Central Committee - She was unanimously elected in the 17th Party Congress
- ↑ Jasodhara Bagchi; Sarmistha Dutta Gupta (24 January 2005). The Changing Status of Women in West Bengal, 1970-2000: The Challenge Ahead. SAGE Publications. p. 89. ISBN 978-0-7619-3242-0.
- ↑ All India Agragami Mahila Samity. Central Committee
- ↑ The Quarterly Review of Historical Studies. Institute of Historical Studies. 2004. p. 125.
- ↑ "Late Forward Bloc senior leader and former MLA Aparajita".