அபராஜிதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அபராஜிதோ
இயக்குனர் சத்யஜித் ராய்
கதை சத்யஜித் ராய், நாவலின் தழுவல்விபுதிபூஷன் பந்தியோபதெயே
நடிப்பு கனு பானர்ஜி
கருனா பானர்ஜி
பினகி சென்குப்தா
ஸ்மரன் கோஷல்
வெளியீடு 1957
கால நீளம் 110 நிமிடங்கள்
மொழி வங்காள மொழி
முந்தையது பதேர் பாஞ்சாலி
பிந்தையது அபுர் சன்ஸார்
விருதுகள் கோல்டன் லயன், வெனிஸ் திரைப்பட விழா

அபராஜிதோ (வங்காள மொழி: অপরাজিত Ôporajito, ஆங்கிலம் The Unvanquished), அப்புவின் கல்லூரி வாழ்க்கையினையும் அவனது தந்தையின் இழப்பு போன்ற பல நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.மேலும் இத்திரைப்படம் டைம் இதழின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

கலைப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

அப்புவின் சகோதரியின் மரணத்திற்குப் பின்னர் வாரனாசியில் வந்து தங்குகின்றனர் அப்புவின் பெற்றோர் அப்புவும் அவர்களுடன் செல்கின்றான்.அங்கு சிறிது காலங்களிலேயே அப்புவின் தந்தையும் இறந்து போகின்றார்.இதனைத் தொடர்ந்து அப்புவின் தாயான சர்போஜா வங்காளத்திற்குச் சென்று அங்கு ஒரு கிராமக் குடிசையினுள் வாழ்க்கை நடத்துகின்றார்.இதனைத் தொடர்ந்து அப்புவும் படிப்பதற்காக கொல்கத்தா நோக்கிச் செல்கின்றான்.பள்ளி விடுமுறைகளுக்கு அம்மாவை வந்து சந்தித்தும் கொள்கின்றான்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபராஜிதோ&oldid=2204228" இருந்து மீள்விக்கப்பட்டது