அபய தானம்
Appearance
அபய தானம் (அடைக்கல தானம்) என்பது சமண சமயத்தினரின் நான்கு முக்கிய தானங்களுள் ஒன்று.[1] அன்ன தானம், சாத்திர தானம், ஔடத தானம் ஆகியவை மற்ற மூன்றாகும். அபயதானம் என்பது தன்னைக் காக்குமாறு வேண்டி வந்தோரைப் பாதுகாத்தல் ஆகும். சமண ஆலயங்களுக்கு அருகில் இவ்வாறு அண்டி வந்தோரைப் பாதுகாப்பதற்கென்றே தனி இடங்கள் இருந்தன. இவற்றுக்கு அஞ்சினான் புகலிடம் என்று பெயர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தில் வெள்ளாடைக்காரருக்கு அஞ்சினான் புகலிடம் அமைத்த செய்தி உடைய கல்வெட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.