உள்ளடக்கத்துக்குச் செல்

அபயா லாக்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபயா லாக்கசு (Abaya Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் ஐதரோகார்பன் ஏரிகளில் ஒன்றாகும் [1]

திரவ ஈத்தேனும் மீத்தேனும் சேர்ந்து இந்த ஏரியை உருவாக்குகியுள்ளன. காசினி விண்வெளி ஆய்வுக்கலம் இந்த ஏரியைக் கண்டறிந்தது[2].

73.17° மற்றும் 45.55° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் 65 கிலோமீட்டர் நீளத்திற்கு அபயா லாகசு ஏரி அமைந்துள்ளது. எத்தியோப்பியாவில் உள்ள அபயா ஏரியின் நினைவாக இந்த ஏரிக்கு அபயா லாக்கசு என்று பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Abaya Lacus". USGS planetary nomenclature page. USGS. Retrieved 2013-12-28. {{cite web}}: External link in |work= (help)
  2. Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. pp. 154–155. ISBN 978-981-281-161-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபயா_லாக்கசு&oldid=4409381" இலிருந்து மீள்விக்கப்பட்டது