அன்ஸ்ராஜ் வர்மா குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்ஸ்ராஜ் வர்மா குழு, பட்டியல் சாதிப் பிரிவில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் போன்ற 6 உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.[1]

பின்னணி

ஆதி திராவிட சமூகத்தில் உள்ள பள்ளர் உள்ளிட்ட ஆறு உட்பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்கவேண்டும் என்றும், மேலும் தேவேந்திர குலத்தினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலிருந்து நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை, புதிய தமிழகம் அரசியல் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசிடம் முன் வைத்தார்.[2][3]

குழுவின் அமைப்பும் செயல்பாடுகளும்

இக்கோரிக்கையை பரிசீலிப்பது தொடர்பாக தமிழ்நாட்டு அரசின் இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் செயலர், ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஆதி திராவிடர் நல இயக்குநர் உறுப்பினர் & செயலராகவும் இடம் பெற்றுள்ளனர். இக்குழு சம்பந்தப்பட்ட இன மக்களிடம் ஆலோசனை நடத்தியும், பழங்கால வரலாறு குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தும், இந்தக் கோரிக்கைகளை ஏற்பது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

பிணக்குகள்

இந்த ஆறு பிரிவினர்களை ஒடுக்கப்பட்டோர் பட்டியலிருந்து நீக்கப்பட்டால், வருங்காலத்தில் இக்குல சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்தங்கிவிடுவர் என ஒரு பிரிவினர் கருதி, கிருஷ்ணசாமியின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ஸ்ராஜ்_வர்மா_குழு&oldid=3008264" இருந்து மீள்விக்கப்பட்டது