அன்வர் அகேவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்வர் முகமதுபாய் அகேவான்
பிறப்புதிசம்பர் 4, 1936(1936-12-04)
அகோலா , மகாராஷ்டிரா
இறப்பு6 சூலை 1991(1991-07-06) (அகவை 54)
தொழில்
  • வாழ்க்கை வரலாற்றாசிரியர்
  • நாட்டுப்புறவியலாளர்
  • பத்திரிகை ஆசிரியர்

அன்வர் முகமதுபாய் அகேவான் (4 டிசம்பர் 1936 - 6 ஜூலை 1991) என்பவர் ஒரு குஜராத்தி வாழ்க்கை வரலாற்றாசிரியர், நாட்டுப்புறவியலாளர் மற்றும் இந்திய பத்திரிகை ஆசிரியர் ஆவார். அகோலாவில் பிறந்து குஜராத் மற்றும் பம்பாயில் கல்வி பயின்ற அவர் பல புத்தக வெளியீடுகளைத் திருத்தியுள்ளார். அவர் பெரும்பாலும்ம த சிந்தனைகள் மற்றும் குஜராத்தின் பல்வேறு துறவிகள் பற்றி எழுதினார்.

சுயசரிதை[தொகு]

அகேவான் 1936 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி அகோலாவில் (தற்போது இந்தியாவின் மகாராஷ்டிராவில் ) பிறந்தார். அவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முறையே சிவராஜ்காத் மற்றும் கோண்டலில் முடித்தார். பம்பாயில் இருந்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். ஆக்ரா ஹிந்தி வித்யாபீடத்தில் பட்டம் பெற்றார். பம்பாயில் ஜெய் குஜராத் மற்றும் ரூப்லேகா வார இதழ்களில் பணியாற்றினார். ஆஸ்தா என்ற இதழில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். [1]

1991 ம் ஆண்டு ஜூலை மாதம் 6ந் தேதி இறந்தார்.

படைப்புகள்[தொகு]

வேத்சஹித்யானோ பரிசு (1965), கதைத் தொகுப்பு அத்வைதா (1974), சாதனா அனே சாக்ஷாத்கர் (1989), சின்மயா காயத்ரி (1989) போன்ற மதச் சிந்தனைகள் பற்றிய படைப்புகளை அவர் எழுதினார். [2] [3] [4]

ரஹிமான் அனே ஜமால் (1952), கிர்தர் கவிராய் (1952), சாய் தீந்தர்வேஷ் (1953), சந்த் தீன்தயாள்கிரி (1954), தாசி ஜீவன் (1956), கவி கேங் (1954), சாந்த் தாது (1987, தாது தயாள் மீது) ஆகியவை புனிதர்களைப் பற்றிய படைப்புகள். குஜராத்தின் ரன்னாடே (1966), ராஜஸ்தானி ரஸ்தர் (1974) மற்றும் கசும்பினோ ரங் (1988) ஆகியவை மேற்கு இந்தியாவின் நாட்டுப்புற இலக்கியங்களின் தொகுப்புகளாகும். [5]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • குஜராத்தி மொழி எழுத்தாளர்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "સવિશેષ પરિચય: અનવર આગેવાન, ગુજરાતી સાહિત્ય પરિષદ" (in gu). http://gujaratisahityaparishad.com/prakashan/sarjako/savishesh/Savishesh-Anvar-Agewan.html. 
  2. ગુજરાતી સાહિત્યકોશ: અર્વાચીનકાળ. Gujarati Sahitya Parishad. Vora, Niranjan (1990). Soni, Raman; Dave, Ramesh R.; Topiwala, Chandrakant (eds.). ગુજરાતી સાહિત્યકોશ: અર્વાચીનકાળ [Encyclopedia of Gujarati Literature: Modern Era] (in Gujarati). Vol. II (1st ed.). Ahmedabad: Gujarati Sahitya Parishad. p. 18. OCLC 312020358.
  3. "સવિશેષ પરિચય: અનવર આગેવાન, ગુજરાતી સાહિત્ય પરિષદ" (in gu). http://gujaratisahityaparishad.com/prakashan/sarjako/savishesh/Savishesh-Anvar-Agewan.html. "સવિશેષ પરિચય: અનવર આગેવાન, ગુજરાતી સાહિત્ય પરિષદ" [Anwar Agewan]. Gujarati Sahitya Parishad (in Gujarati). Archived from the original on 7 April 2016. Retrieved 2 August 2015.
  4. ગુજરાતના સારસ્વતો - ૧. Gujarat Sahitya Sabha. Shastri, Keshavram Kashiram (January 2013). ગુજરાતના સારસ્વતો - ૧ Gujaratna Saraswato - 1 [Who's Who in Gujarati Literature] (in Gujarati) (Updated ed.). Ahmedabad: Gujarat Sahitya Sabha. pp. 4–5. OCLC 900401455.
  5. "સવિશેષ પરિચય: અનવર આગેવાન, ગુજરાતી સાહિત્ય પરિષદ" (in gu). http://gujaratisahityaparishad.com/prakashan/sarjako/savishesh/Savishesh-Anvar-Agewan.html. "સવિશેષ પરિચય: અનવર આગેવાન, ગુજરાતી સાહિત્ય પરિષદ" [Anwar Agewan]. Gujarati Sahitya Parishad (in Gujarati). Archived from the original on 7 April 2016. Retrieved 2 August 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Works by Anwar Agewan at Google Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_அகேவான்&oldid=3666105" இருந்து மீள்விக்கப்பட்டது