அன்லவுகு அமந்தா தியூப்விக்
அன்லவுகு அமந்தா தியுப்விக் Anlaug Amanda Djupvik | |
---|---|
பிறப்பு | போர்தே, நார்வே |
தேசியம் | நார்வேயர் |
பணி | வானியலாளர் |
அன்லவுகு அமந்தா தியூப்விக் (Anlaug Amanda Djupvik) ஒரு நார்வே வனியலாளர் ஆவார். இவரது ஆய்வுப்புலம் விண்மீன்களின் உருவாக்க்மும் தொடக்கநிலைப் பொருண்மைச் சார்பின் தோற்றமும் ஆகும்.
இவர் நார்வே, போர்தேவில் பிறந்தார். இது நார்வே மேற்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறுநகராகும். இவர் கர்சுகோய் தீவில் உள்ள இலெய்கோங் எனும் சிற்றூரில் பிற்ந்து வளர்ந்தார். இந்தச் சிற்றூர் ஆலேசந்து நகரத்துக்குதெற்கே அமைந்துள்ளது. இவர் திருமணமான பிறகு காசு எனும் குடும்பப் பெயரைப் பயன்படுத்தினார். பின்னர் 2004 இல் மீண்டும் தியூப்விக் என மாற்றிக்கொண்டார். இவர் 1982 இல் ஓசுலோவில் உள்ள கோட்பாட்டு வானியற்பியல் நிறுவனத்தில் தன் பட்டப் படிப்பைத் தொடங்கினார். இவர் அங்கு அறிவியல் முதுவர் பட்டத்தைப் பெற்றார். முதுவர் பட்டத்துக்கான இவரது தலைப்பு 1990-1991 கால இடைவெளியில் கலீலிய நிலாக்களின் பரிமாற்ற நிகழ்வு பற்றிய நோக்கீடுகளும் பகுப்பாய்வும் ஆகும். இது காரே அக்சுனெசுவால் மேற்பார்வையிடப்பட்டது.
(32892) 1994 DW{{{2}}} | பிப்ரவரி 22, 1994 | MPC |
இவர் 1992 ஜனவரியில் இருந்து 1994 ஏப்பிரல் வரை கானரித் தீவில் இலா பால்மாவில் அமைந்த உரோக் தெலாசு முச்சோசு வான்காணக நார்திக் ஒளியியல் தொலைநோக்கியின் மாணவ வானியலாளராக விளங்கினார். இதற்கு நார்கேசு போர்சுக்னிங்சுராது எனும் நார்வே ஆராய்ச்சி மன்றத்தால் உதவிநல்கை வழங்கப்படுகிறது.இங்கு, முதன்மைப் பட்டைச் சிறுகோள் (32892) DW 1994 பிப்ரவரி 22 இல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[2] இவர் கோரான் ஓலோப்சன் கீழ் தன் முனைவர் பட்ட ஆய்வில் 1994 ஏப்பிரல் முதல் 1999 ஏப்பிரல் வரை சுட்டாகோல்ம் வான்காணகத்தில் ஈடுபட்டார்.
இவர் 1999 மேவில் இருந்து 2000 மே வரையில் நூர்துவிய்க்கில் உள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையின் வானியற்பியல் பிரிவில் முதுமுனைவர் ஆய்விருக்கையில் மால்கம் பிரித்லந்துடன் இணைந்து பணிபுரிந்தார். இவர் 2000 இல் இருந்து 2002 வரையில் நார்வே ஆராய்ச்சி மன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் 2000 மேவில் இருந்து ம்தலி இணைவானியலாளர் பொறுப்பிலும் 2002 இல் இருந்து வானியலாளர் பொறுப்பிலும் NOT நிறுவனத்தில் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
- ↑ "32892 (1994 DW)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.