அன்றாட வாழ்வியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்றாட செயற்பாடுகள், பழக்கங்கள், பொருள் - உளவியல் தேவைகள், பொழுது போக்குகள், உறவாடல்கள், வேலை குடும்ப சுழற்சிகள் என வாழ்க்கையின் நாளாந்த வாழ்வியல் அம்சங்களை அன்றாடல் வாழ்வியல் குறிக்கின்றது.

பொருளாதாரம், சூழமைவு, தனிமனித நிலைகளைக் கடந்து அன்றாடம் ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயற்பாடுகள் பல உள. நித்திரை செய்தல், துயிலெழுதல், கழிவு அகற்றுதல், குளித்தல், உணவு உட்கொள்ளுதல் என பல்வேறு செயற்பாடுகள் உண்டு. இவை அன்றாட வாழ்வியல் ஆய்வின் கருப்பொருள்கள் ஆகின்றன.

அன்றாட செயற்பாடுகள் பட்டியல்[தொகு]

  • உணவு தயாரித்தல், சாப்பிடுதல்
  • உடை துவைத்தல், மடித்தல், ஒழுங்குபடுத்தல், அணிதல்
  • துப்பரவு செய்தல்
  • வாசித்தல்
  • நடத்தல்
  • பொருட்களை ஒழுங்குபடுத்தல்
  • திட்டமிடுதல்
  • பயணித்தல்
  • உரையாடுதல்

அன்றாட வாழ்வியல் ஆய்வு முறைகள்[தொகு]

அன்றாடம் மனிதர்கள் தமது நேரத்தை எந்த எந்த விதத்தில் செலவு செய்கின்றார்கள் என்பது வாழ்வியல் பற்றியும், சமூகங்கள் பற்றியும், சமூக மாற்றங்கள் பற்றியும் பல தகவல்களை தரக்கூடியது. அன்றாடம் சில சமூகங்களில் பலர் தமது நேரத்தை தொலைக் காட்சியில் செலவு செய்கின்றார்கள். வேறு சில சமூகங்களில் கணினி முக்கியத்துவம் பெறுகின்றது. வேறு சில சமூகங்களில் தொலைக் காட்சியோ, கணினியோ இல்லை, ஆனால் அவர்களுக்கு ஆறு சென்று தண்ணீர் எடுத்து வருவதற்கு பல மணித்துளிகள் தேவையாகின்றது. இப்படி அன்றாட வாழ்வில் எவ்வாறு நேரம் செலவு செய்யப்படுகின்றது என்பதை வைத்து பல அலசல்களை மேற்கொள்ளலாம்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்றாட_வாழ்வியல்&oldid=3512241" இலிருந்து மீள்விக்கப்பட்டது