ஆன்டன் செக்கோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்ரன் செக்கோவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆண்டன் பாவ்லோவிச் செக்கோவ் (Anton Pavlovich Chekhov, உருசிய மொழி: Анто́н Па́влович Че́хов, சனவரி 29 [யூ.நா. சனவரி 17] 1860சூலை 15 [யூ.நா. சூலை 2] 1904) ஓர் உருசிய சிறுகதை எழுத்தாளரும், நாடகாசிரியரும் ஆவார். இவர், உலக இலக்கியத்தில் மிகப் பெரும் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவராவார். இவரது நாடகாசிரியர் பணிக்காலத்தில் இவர் கடற்புறா (The Seagull), அங்கிள் வான்யா (Uncle Vanya), மூன்று சகோதரிகள் (Three Sisters), செர்ரிப் பழத்தோட்டம் (The Cherry Orchard) ஆகிய நான்கு ஆக்கங்களை உருவாக்கினார். இவரது சிறந்த சிறுகதைகள் பிற எழுத்தாளர்களாலும், திறனாய்வாளர்களாலும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. தனது இலக்கியத்துறைப் பணிக்காலத்தின் பெரும்பகுதியில் அவர் மருத்துவத் தொழில் புரிந்து வந்தார். "மருத்துவம் எனது சட்டபூர்வமான மனைவி, இலக்கியம் எனது வைப்பாட்டி" என அவர் ஒரு முறை குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

1896 ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்த போது, செக்கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். பின்னர், கான்சிட்டாண்டின் தாலின்சிலாவிசிக்கியின் மாஸ்கோ கலை அரங்கில் அரங்கேறியபோது இது பெரும் புகழ் பெற்றது. இதன் பின்னரே இவரது மற்ற மூன்று நாடகங்களும் எழுதப்பட்டன. மரபுவழி நடிப்புக்குப் பதிலாக "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், உரைகளுக்குள் ஆழ்ந்த வாழ்க்கையையும் கொடுத்ததனால், இந்த நான்கு நாடகங்களும் நடிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தன.

செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.

இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும் ஆன்டன் செக்கோவ் பற்றி வாசிக்க[தொகு]

  • Glenday, Michael K. (2012), F. Scott Fitzgerald, London and New York: Palgrave Macmillan, ISBN 978-0-333-66900-6

படக் காட்சி அகம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rayfield, Donald (1997). Anton Chekhov: A Life. ISBN 0-00-255503-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டன்_செக்கோவ்&oldid=2200388" இருந்து மீள்விக்கப்பட்டது